பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான ஸ்ருதிஹாசனுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. சோகத்துடன் தெலுங்கு திரை உலகிற்கு சென்ற ஸ்ருதிஹாசனுக்கு டோலிவுட் ரசிகர்களும் நடிகர்களும் ஆதரவு கரம் நீட்டவே டோலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன், அப்படத்திற்கு பின்னர் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கின்றார். பிரேமம் படத்தின் புரமோஷனில் பங்கெடுத்த ஸ்ருதிஹான், தெலுங்கு திரை உலத்தை விட்டு வெளியேறும் எண்ணம் துளியும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் ஸ்ருதிஹாசன் கூறினார். பல மொழிகளிலிருந்தும் பல பட வாய்ப்புகள் வருவதாகவும் மனதிற்கு நெருக்கமான கதைகளை மட்டும் தேர்வு செய்வதாகவும் ஷ்ருதிஹாசன் கூறினார்.