ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன், டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆரை இணைத்து கொரட்டாலா சிவா இயக்கிய ஜனதா கேரேஜ் திரைப்படம் ரூ 120 கோடிக்கு வசூல் சாதனை படைத்து வருகின்றது. ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த தெலுங்கு படங்களின் பட்டியலில் ஜனதா கேரேஜ் இடம் பிடித்து விட்டது. இதனால் உச்ச மகிழ்ச்சியில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் சொகுசு பங்களா ஒன்றை இயக்குனருக்கு பரிசளிக்க திட்டமிட்டுள்ளாராம். பிரபாஸ் நடிப்பில் மிர்ச்சி, மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த சிவா ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜனதா கேரேஜ் எனும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றியின் போது ரூ 50 லட்சம் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை இயக்குனர் சிவாவிற்கு மகேஷ் பாபு பரிசாக வழங்கினார். அதே போல் ஜூனியர் என்.டி.ஆரும் சொகுசு பங்களா ஒன்றை சிவாவிற்கு பரிசளிக்கவுள்ளாராம்.