வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள ஜனதா கேரேஜ் திரைப்படம் செப்டம்பர் 1ல் வெளிவந்து ரூ 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ஜூனியர் என்.டி.ஆர் விசாகபட்டிணத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றி கொண்டாட்ட நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தார். திடீரென ஒத்திவைக்கப்பட்ட ஜனதா கேரேஜ் சக்ஸஸ் மீட் தற்போது ஐதரபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஐதரபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜனதா கேரேஜ் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் என இரு நாயகிகள் நடித்த ஜனதா கேரேஜ் படத்தை மைதிரி மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கியுள்ளார்.