இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு டீஜெ: டுவ்வடா ஜெகன்நாதம் என பெயரிட்டுள்ளனர்.
தில் ராஜூவின் 25வது திரைப்படமான இப்படம் அல்லு அர்ஜூன் - தில் ராஜூ கூட்டணியில், நான்காவது திரைப்படமாகும். ஆர்யா, பருகு, யெவடு போன்ற அல்லு அர்ஜூனின் படங்களை தில் ராஜூ தயாரித்து லாபம் பார்த்துள்ளார். தற்போது மீண்டும் அல்லு அர்ஜூன் படத்தை தில் ராஜூ தயாரிக்கின்றார். தமிழில் முகமூடி, ஹிந்தியில் ஹ்ருத்திக்ரோஷனுடன் மொகஞ்சதாரோ உள்ளிட்ட படங்களில் நடித்த பூஜா ஹெக்டே இப்படத்தில் நாயகியாக நடிக்கக் கூடும் என தகவல்கள் கூறுகின்றன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.