புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சமீபகாலமாக தமிழில் ஹிட்டான படங்கள் தெலுங்கில் டப் ஆவதும், தெலுங்கில் ஹிட்டான படங்கள் தமிழில் டப் ஆவதும் சகஜமாகிவிட்டது. இன்னும் சொல் லப் போனால் சில படங்கள் இரண்டு மொழிகளிலுமே நேரடியாக வெளியாகியும் வருகின்றன. மேலும், தமிழில் வெற்றி பெற்ற பிச்சைக்காரன் தெலுங்கில் டப்பாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து தற்போது வெற்றி மாறனின் விசாரணை தெலுங்கில் டப்பாகிறது.
இந்த நிலையில், பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த சிவகாசி படத்தை தெலுங்கில மாஸ் ராஜா -என்ற பெயரில் வெளியிட டப் செய்து வருகின்றனர். 11 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடிக்க, கோடம்பாக்க ஏரியா ஓட்டுக் கேட்க வாரியா -என்ற பாடலில் நயன்தாரா விஜய்யுடன் குத்தாட்டமாடியிருந்தார். தற்போது தெலுங்கில் நயன்தாராவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்திருப்பதால் ஒரு பாடலில் நடனமாடியிருந்தாலும் வியாபாரரீதியாக நயன்தாராவும் இந்த படத்திற்கு பயன்பட்டிருக்கிறாராம்.