தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சித்தார்த்தின் முதல் மலையாள பிரவேசம் 'கம்மர சம்பவம் என்கிற படத்தின் மூலம் நிகழ இருக்கிறது என்பது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.. அதேசமயம் தமிழ், தெலுங்கில் மட்டும் தொடர்ந்து பிஸியாக இருக்கும் தமன்னாவும் இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்.. இந்தப்படத்தை இயக்குபவர் பிரபல விளம்பர பட இயக்குனரான ரதீஷ் அம்பாட். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் ஆரம்பத்தில் துவங்கப்பட இருக்கிறது.
இந்தப்படத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்க, சித்தார்த்துக்கும் மிக முக்கியமான வேடமாம். ஆனால் இதில் தமன்னா யாருக்கு ஜோடி என்பது பற்றி இன்னும் தகவல் தெரியவில்லை. தமன்னா இந்தப்படத்தில் நடிக்கிறார் என்பதுகூட பேச்சுவார்த்தையில் தான் இருப்பதாகவும் இன்னும் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவிலை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் தமன்னா நடிப்பது உறுதி என்றும், அவரது கால்ஷீட் கிடைப்பது தாமதம் ஆவதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் பிப்ரவரி மாதத்தில் படமாக்க இருக்கிறார்கள் என்றும் கூட சொல்லப்படுகிறது.
இன்னொரு முக்கிய விஷயம் இசையமைப்பாளர் தமன் இந்தப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இதனால் இந்தப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது தமன்னா அல்லது தமன்னாவா என்கிற பெயர் குழப்பமும் உருவாகி இருக்கிறது..