மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இளம் வாரிசு நடிகருடன் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வரும் மலையாள நடிகை இதுநாள் வரை துலகிற சல்மான், பிருத்விராஜ் ஆகியோருடன் தலா ஒரு படத்திலும் திலீப், குஞ்சாக்கோ போபன் ஆகியோருடன் தலா மூன்று படங்களிலும் நடித்துவிட்டார். ஆனால் நஸ்ரியாவின் மணாளன் பஹத் பாசிலுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவேண்டும் என்பது அவர் ஆசை. அதை பல சந்தர்பங்களில் வெளிப்படுத்தியும் வந்துள்ளார்.
அப்படி ஒரு வாய்ப்பு இப்போது அவரை தேடிவந்துள்ளது. கமர்ஷியல் இயக்குனர் ரபி மெக்கார்டின் இயக்கும் புதிய படத்தில் இவர்கள் இருவரும் ஜோடி சேர்கிறார்கள். இதில், கண்டிப்பான கல்லூரி பேராசிரியர் தம்பதியின் மகனாக பிறந்த பஹத் பாசிலின் கல்லூரி காலத்தில் இருந்து பின்னர் அவர் வாழ்க்கையில் செட்டில் ஆவது வரையிலான காலகட்டங்களில் அவரது நட்பு மற்றும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் கதையாம். ஆனால் இயக்குனர் ரபியின் ஸ்டைலில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இது உருவாக இருக்கிறதாம்.