ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மெகாஸ்டார் மம்முட்டி மீது தான் வைத்திருக்கும் அன்பை, மரியாதையை வெளிப்படுத்துவதற்காக அவ்வப்போது சில விஷயங்களை பண்ணுவார் பிருத்விராஜ். போக்கிரி ராஜா என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக நடித்திருந்தார். அதன்பின் இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட மம்முட்டி நடித்த 'முன்னறியிப்பு' என்கிற படத்தில் மம்முட்டியை ஒரு பிரேமில் கூட சந்திக்காத ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் பிருத்விராஜ்.. இதையெல்லாம் விட அடுத்து இன்னொன்றையும் செய்தார். கடந்த 2013ல் மம்முட்டியை வைத்து ரஞ்சித் டைரக்சனில் 'கடல் கடந்து ஒரு மாத்துக்குட்டி' என்கிற படத்தை தானே சொந்தமாக தயாரித்தார்..
ஆனால் படம் அவ்வளவாக போகவில்லை தான்.. அதனால் பிருத்விராஜ் கொஞ்சம் கடன்பட்டார் என்பது உண்மை.. மம்முட்டிக்கோ அது சமயம் வரும்போது தீர்க்கவேண்டிய (நன்றிக்)கடன் ஆனது. அதற்கான நேரமும் இப்போது வந்துவிட்டது.. இப்போது மீண்டும் மம்முட்டியை வைத்து தனது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மூலமாக 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் நுழைகிறார் சினேகா. வரும் ஆக-28ல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தை ஹனீப் அதேனி என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார