இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் சர்தார் கபார் சிங் படத்திற்கு பின்னர் நடிக்கவிருக்கும் படத்தை இயக்குனர் டோலி இயக்குகின்றார். சர்தார் படத்தை தயாரித்த பவனின் நண்பர் சரத் மாரர் இப்படத்தையும் தயாரிக்கின்றார். கடப்பா கிங் என பெயரிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இப்படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக். தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர்கள் மூவர் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு சகோதர்களாக நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகின்றார். பவன் கல்யாணின் கடப்பா கிங் படத்தில் சர்வானந்த் நடிக்கவுள்ளாராம், மேலும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, நவீன் சந்திரா போன்ற இளம் நடிகர்களுக்கும் நடிக்கின்றனர். நடிகை ஷ்ருதிஹாசன் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை(ஆகஸ்ட் 6) துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.