இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜூலை 22ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், மலாய் என பல மொழிகளில் திரைக்கு வந்த கபாலி திரைப்படம் வெளியிட்ட அணைத்து பகுதிகளிலும் வசூலை அள்ளி வருகின்றது. தெலுங்கிலும் கடந்த வெள்ளியன்று வெளிவந்த கபாலி திரைப்படம் வெளியன முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 8.8 கோடி வசூல் செய்துள்ளது
கபாலி திரைப்படம் முதல் நாளில் நிசாமில் ரூ 2.5 கோடி, சீடெட் பகுதியில் ரூ 1.65 கோடி, யுஏ-வில் 0.98 கோடி, குண்டூர் கிழக்கில் ரூ 0.91 கோடி, குண்டூர் மேற்கு பகுதியில் ரூ 0.70 கோடி, கிருஷ்ணாவில் 0.66 கோடி, நெல்லூரில் ரூ 0.36 கோடி வசூலித்துள்ளது. மொத்தத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்குகானாவில் மட்டும் முதல் நாளில் கபாலி ரூ 8.8 கோடி வசூல் செய்துள்ளது. மொழிமாற்றம் திரைப்படங்களில் இதுவரை கபாலிக்கு நிகராக எந்த படமும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வசூல் செய்யவில்லை என்ற பெருமையையும் கபாலி பெற்றுள்ளது. தெலுங்கில் டப் செய்யப்பட்ட படங்களில் சங்கர் இயக்கி ஐ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 1.50 கோடி இதுவே முதல் சாதனையாக பார்க்கப்பட்டது. இதனை கபாலி எளிதாக முறியடித்துள்ளது.