‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இந்த வருடம் பிருத்விராஜுடன் இணைந்து மலையாளத்தில் வேதிகா நடித்த படம் 'ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ்'.. படம் நன்றாக போகாவிட்டாலும் கூட, குடும்ப பாங்கான கதையில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வேதிகாவுக்கு பாரட்டுக்கள் கிடைத்தன. இதுநாள் வரை வந்தோமோ நடித்தோமா என்று நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த வேதிகா, இப்போது தனக்கு தெரிந்த புகைப்பட கலைஞர்களையும் வீடியோ கேமராமேன்களையும் தேடித்தேடி வரவழைத்து கேமரா பற்றிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு இருக்கிறார்.. மேலே சொன்ன தலைப்பையும் இப்போது சொன்ன விஷயத்தையும் வைத்து வேதிகா படம் எதுவும் இயக்கப்போகிறாரோ என நினைக்கவேண்டாம். எல்லாம் சென்ட்ரல் ஜெயிலுக்கு போவதற்குத்தான்..
ஆம். திலீப் கதாநாயகனாக நடித்து வரும் 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' படத்தில் வேதிகா தான் நாயகி.. அதிலும் புகைப்படம், வீடியோ இரண்டையுமே எடுக்கத் தெரிந்த ஜர்னலிஸ்ட்டாக நடிக்கிறார். டெக்னிக்கலாக தனக்கு எதுவும் தெரியாது என்பதால் ஷூட்டிங்ஸ்பாட்டில் போய் முழித்துக்கொண்டு நிற்க கூடாது என்பதற்காக அடிப்படை விஷயங்களை கற்று வருகிறாராம் வேதிகா.. அவரது பணிதான் ஸ்டைலிஷாக இருக்குமே தவிர நடுத்தரவர்க்கத்தில் இருந்து வந்த மிடில் கிளாஸ் பெண்ணாகவே நடிக்க இருக்கிறாராம் வேதிகா. 'சிங்காரவேலன்' படத்தை தொடர்ந்து இதில் திலீப்புடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்கிறார் வேதிகா.