பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒருபக்கம் மிக பிரமாண்டமான 'புலி முருகன்' இன்னொரு பக்கம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தயாராகியுள்ள 'ஒப்பம்' என மோகன் லாலின் இருவேறு பரிமாணங்களை காட்டும் இரண்டு படங்கள் மலையாளத்தில் தயாராகியுள்ளன. இதில் 'ஒப்பம்' படம் மோகன்லால்-பிரியதர்ஷன் என்கிற எவர்கிரீன் கூட்டணியில் உருவாகியுள்ள படம். வழக்கமாக பிரியதர்ஷன் படங்கள் காமெடி மற்றும் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும்.. ஆனால் இந்தமுறை த்ரில்லர் ரூமின் கதவை திறந்துள்ளார் பிரியதர்ஷன்.
பிரியதர்ஷனின் இன்னொரு பக்கம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. இங்கே இருக்கும் மோகன் ராஜாவுக்கெல்லாம் அண்ணன் போல ரீமேக் கிங் என பெயர் எடுத்தவர். அதனால் இந்த 'ஒப்பம்' படம் கூட ஏதாவது இந்தப்படத்தின் ரீமேக் தானோ என பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. ஆனால் இது அக்மார்க் ஒரிஜினல் படம் என்கிறார் பிரியதர்ஷன். படத்தின் ஒரு காட்சி கூட எங்கேயும் இருந்து உருவியது இல்லை என்கிறது படக்குழு.. மோகன்லாலுடன் விமலா ராமன், அனுஸ்ரீ, சமுத்திரக்கனி, இன்னொசன்ட் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.