தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா பயங்கர கார் விபத்திலிருந்து அதிசயமாக உயிர் தப்பினார். இதுபற்றிய விபரம் வருமாறு:
ஹிந்த்பூர் தொகுதி சட்டசபை உறுப்பினரான பாலகிருஷ்ணா தன் தொகுதிக்கு விசிட் சென்றிருந்தார். தொகுதி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று காலை ஹிந்த்பூரிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். கர்நாடக மாநிலம் பாகேஹல்லி என்ற இடத்தில் வரும்போது திடீரென கார் டயர் வெடித்தது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் பாலகிருஷ்ணா லேசான சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார். டிரைவர் பலத்த காயம் அடைந்தார். முன்பும் பின்பும் வாகனங்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் பாலகிருஷ்ணா மாற்று காரில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்ட்டார். அங்கு அவர் சிறிய அளவில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.