பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நாகார்ஜூனா-அமலா தம்பதியரின் மகன் அகில் ஸ்ரேயா புபல் எனும் பெண்னை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாலினி புபலின் மகள் ஸ்ரேயாவும் அகிலும் காதலித்து வருவதாகக் கூறப்படுகின்றது. குடும்ப நண்பர்களாக இருந்து தற்போது காதலர்களாக மாறியிருக்கும் இருவரது புகைப்படங்களும் இணையத்தில் உலா வர துவங்கியுள்ளன.
நாகார்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யா நடிகை சமந்தாவை விரைவில் காதல் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் நாகார்ஜூனாவின் இளைய மகனும் காதலில் விழுந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அகில் : தி பவர் ஆப் ஜூவா எனும் முதல் படத்தில் சறுக்கலை சந்தித்த அகில், முழுவதுமாக இத்தகவலை மறுக்கவில்லை மாறாக திரை உலகில் சாதித்த பின்னரே திருமணம் என கூறியுள்ளார்.