ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படமன கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்புகள் ஜூன் 6ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இரட்டை வேடங்களில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதால் உடல் எடையை குறைக்கும் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மே மாதத்திலேயே துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி ஜூன் 6ல் படப்பிடிப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் மற்றும் ராம் சரணின் இணை தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்ககூடும் என கூறப்படுகின்றது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்