ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
நேற்று முன்தினம் இந்தியில் 'ட்ராபிக்' படம் வெளியானது.. மலையாளத்தில் ராஜேஷ் பிள்ளை இயக்கிய ட்ராபிக் படத்தின் ரீமேக் தான் இது. இந்தியிலும் அவரேதான் இயக்கியிருந்தார்.. மனோஜ் பாஜ்பாய் நடித்த இந்தப்படம் பல மாதங்களுக்கு முன்பே தயாரானாலும், சில காரணங்களால் ரிலீசாகாமல் முடங்கி கிடந்தது. சில மாதங்களுக்கு முன் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி திடீர் மரணத்தை தழுவியது அதில் முக்கியமான காரணம்.. இருந்தாலும் மலையாளத்தில் அவர் இயக்கிய 'வேட்ட' திரைப்படத்தை ரிலீஸ் செய்த மனநிறைவுடன் அடுத்தநாள் தான் மரணமடைந்தார் ராஜேஷ் பிள்ளை...
ஆனால் 'ட்ராபிக்' படம் இந்தியில் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் மாலுமி இல்லாத கப்பல் தடுமாறுவதுபோல படம் ரிலீஸாவதில் குழப்பம் ஏற்பட்டது. ஒருவழியாக நேற்று முன்தினம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள்.. மலையாளத்தில் இருந்த அளவுக்கு இந்தியில் இதன் தாக்கம் இல்லை என்றாலும் கூட ரசிகர்கள் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பை அளித்துள்ளனர்.. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜிஷ்னு ராகவனும் இப்போது உயிருடன் இல்லை. கடந்த மாதம் தான் புற்று நோயால் காலமானார் ஜிஷ்னு ராகவன்.. ஆக, படம் ரிலீசாகியும் அதில் பங்களிப்பு செய்த இயக்குனரும் அதில் நடித்த நடிகரும் உயிருடன் இல்லை என்பது வேதனையான விஷயம் தான்.