ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது 'கர்ணன்'.. படத்தில் கர்ணனாக நடிப்பது பிருத்விராஜ் தான்.. ஆம்.. வேறு வழியே இல்லை.. சரித்திர கால படங்களில் நடிப்பதற்கு தமிழ், மலையாளம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே சாய்ஸாக இருப்பவர் என்றால் அது நடிகர் பிருத்விராஜ் தான். ஏற்கனவே உறுமி, காவியத்தலைவன் என கடந்த நூற்றாண்டுகளை பிரதிபலித்த படங்களில் நடித்த பிருத்விராஜ், இப்போது புராண நாயகன் கர்ணன் ஆக மாறப்போகிறார்..
கடந்த வருடம் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற ஒரே படத்தின் மூலம் புகழேணியில் உச்சத்திற்கு ஏறிய இயக்குனர் ஆர்.எஸ்.விமல் தான் மீண்டும் பிருத்விராஜை வைத்து இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் இன்னொரு புதுமையையும் செய்ய இருக்கிறார்கள்.. அதாவது கர்ணன் படம் உருவாகிவரும் அதே நேரத்தில் அதை அனிமேஷன் படமாக உருவாக்கும் பணிகளையும் செய்து வருகிறார் இயக்குனர் ஆர்.எஸ்.விமல். இதற்கான பணிகள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. தியேட்டர்களில் 'திரைப்படமாக கர்ணன்' வெளியான சில மாதங்கள் கழித்து இந்த அனிமேஷன் 'கர்ணன்' சின்னத்திரையிலும் அதை தொடர்ந்து டிவிடிக்களிலும் வெளியாக இருக்கிறதாம்.