தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் ஒருகாலத்தில் புகழ்பெற்ற ஹீரோ, மற்றும் வில்லனாக வலம் வந்தவர் ரத்தீஷ்.. பார்ப்பதற்கு ஒரு சாயலில் நடிகர் சிவச்சந்திரன்போல இருக்கும் இவர், கதாநாயகனாக நடித்துவந்த காலத்தில் அதன்பின் நடிக்க வந்தவர்கள் தான் மம்முட்டியும் மோகன்லாலும்.. பல வருடங்களுக்கு முன்பே மறைந்த நடிகர் ரத்தீசுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். இதில் பார்வதி ரத்தீஷ் என்பவர் 'மதுர நாரங்கா' என்கிற படத்தில் குஞ்சாக்கோ போபனின் ஜோடியாக அறிமுகமானவர்.. மூத்த மகள் பத்மாவுக்கு சினிமா ஆர்வம் இல்லாததால் திருமணத்திற்கான வரன் பார்த்துவந்தார்கள்..
சமீபத்தில் இவரது திருமணமும் விமரிசையாக நடைபெற்றது.. மணப்பெண்ணின் தந்தை ரத்தீஷ் இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காக அவரது பலவருடத்திய நண்பரான மெகாஸ்டார் மம்முட்டி ஒரு குடும்பத்தளைவாரக மாறி இந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.. அதுமட்டுமல்ல நடிகர்கள் சுரேஷ்கோபி மற்றும் ஜெயரான் ஆகியோர் தம்பதி சகிதமாக வந்து மணமக்களை வாழ்ந்தினார்கள்.. தனது அம்மா மேனகா மற்றும் அப்பா சுரேஷ் இருவருடனும் வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், தனது பிஸியான ஷெட்யூல்களுக்கு இடையிலும் திருமண விழாவில் கலந்துகொண்டு, நிகழ்வு முழுவதுமே மணப்பெண்ணின் தோழியாகவே வலம் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.