துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
கிரிக்கெட் சூதாட்ட புயலில் சிக்கி ஒருவழியாக கரையேறியுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இந்த வருடம் எல்லாமே இனிப்பான செய்திகளாகவே கிடைத்து வருகின்றன. அந்தவகையில் பி.ஜேபி கட்சியின் சார்பில் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் ஸ்ரீசாந்த். இன்னொரு பக்கம் இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் வேலைகளும் துவங்கப்பட உள்ளன. அதனால் கொஞ்ச நாளைக்கு கிரிக்கெட்டை ஒதுக்கிவைத்து விட்டு ஒருபக்கம் அரசியல், இன்னொரு பக்கம் சினிமா என முழுமூச்சாக கவனம் செலுத்த இருக்கிறார்.
இவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு 'டீம் 5' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. ஆக்சன் படமாக உருவாகும் சுரேஷ் கோவிந்த் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கம் இந்தப்படத்தில் ஸ்ரீசாந்தின் ஜோடியாக நடிக்கிறார் 'டார்லிங்' நிக்கி கல்ராணி. இந்தப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறார் ஸ்ரீசாந்த். இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களுக்கு ஸ்ரீசாந்த் நன்கு அறிமுகமானவர் என்றாலும் இந்தப்படத்தை மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கிறார்கள். ஸ்ரீசாந்த்துக்கு ஏற்றவாறு கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.