விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் |
தமிழ்சினிமாவில் அடிக்கடி பார்க்க முடியாவிட்டாலும் கூட குறிப்பிட்ட சீரான இடைவெளியில் மலையாள படங்களில் நடித்துகொண்டுதான் இருக்கிறார் வில்லன் நடிகர் ரியாஸ்கான். குறிப்பாக மோகன்லால், திலீப், பிருத்விராஜ் படங்களில் இவருக்கு எப்படியாவது வாய்ப்பு கிடைத்து விடுவது இவரது அதிர்ஷ்டம் தான். தற்போது 'ஷேடோ மேன்' மற்றும் 'சின்ன தாதா' ஆகிய மலையாள படங்களில் நடித்து வருகிறார் ரியாஸ்கான். இதில் 'சின்ன தாதா' படம் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வருகிறது. ராஜூ சம்பகரா என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோட்டயம் அருகில் உள்ள கருகாச்சல் என்கிற பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற படப்பிடிப்பின்போது யாரோ அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடிகர் ரியாஸ்கானின் மீது முட்டை வீசி தாக்கினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியான படக்குழுவினரும், உள்ளூர் மக்கள் சிலரும் சம்பந்தப்பட்ட ஆசாமியை துரத்த, அவரோ யார் பிடியிலும் சிக்காமல் தப்பிவிட்டாராம். சமூக விரோத நடவடிக்கைக்ளில் ஈடுபடும் யாரோ ஒரு நபர்தான் இப்படி செய்திருக்க வேண்டும் என கூறியுள்ள போலீஸார், அந்த விஷமியை தேடிப்பிடிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். நடிகர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.