ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் இறுதியாக ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை தமிழ் படத்தில் நடித்திருந்தார். தேசிய விருது வென்ற இயக்குனர் சேரன் இயக்கிய இப்படத்தை அவர் சி2ஹேச் எனும் முறையில் டிவிடிகளாக வெளியிட்டார். தற்போது இப்படம் தெலுங்கில் திரைக்கு வரவுள்ளது. டோலிவுட்டில் ரன் ராஜா ரன், எக்ஸ்பிரஸ் ராஜா என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ள சர்வானந்த் நடிப்பில் அடுத்ததாக ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் ராஜாதிராஜா என்ற பெயரில் திரைக்குவரவுள்ளது. முதலில் இப்படத்திற்கு யேமிடொ யே மாயா என பெயரிட்டிருந்தனர். தற்போது ராஜாதிராஜா என பெயரை மாற்றி இப்படத்தை திரைக்குக் கொண்டு வர இப்படத்தை தெலுங்கில் வெளியிடும் தயாரிப்பாளர் என்.வெங்கடேஷ் திட்டமிட்டுள்ளார். மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் திரைக்கு வரும் இப்படத்தில் சர்வானந்திற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.