‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நானி மற்றும் நித்யா மேனன் நடிப்பில், 'அல மொடலைண்டி' எனும் படத்தை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் நந்தினி ரெட்டி. இப்படம் பெரும் வெற்றி பெற்று 100 நாட்களைக் கடந்தும் ஓடியது. இப்படத்திற்கு பின்னர் நந்தினி இயக்கிய ஜபர்டஸ்த் படம் படுதோல்வி அடைந்தது. தற்போது கல்யாண வைபோகம் எனும் படத்தை இயக்கி திரைக்கு கொண்டுவந்தார் நந்தினி. ஜபர்டஸ்த் படத்தின் தோல்வியில் துவண்டிருந்த போது அல்லு அர்ஜுனே தன்னை முதலில் ஊக்கப்படுத்தியதாக நந்தினி கூறியுள்ளார்.
மேலும் புதிய யுக்திகளுடன் திரைக்கதையை உருவாக்குமாறும் அல்லு அர்ஜுன் அறிவுரை வழங்கியதாக கூறிய நந்தினி, தான் இயக்கவிருக்கும் படங்களின் கதையை அல்லு அர்ஜுனிடம் கூறி கருத்து கேட்பதாகவும் கூறியுள்ளார். காதல் மற்றும் திருமணத்தை மையப்படுத்தி நந்தினி இயக்கியுள்ள கல்யாண வைபோகமே திரைப்படத்தில் நாக சௌரியா மற்றும் மாளவிகா நாயர் இணைந்து நடித்துள்ளனர்.