ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள மெகாஸ்டார் மம்முட்டிக்கும் தமிழ்நாட்டின் 'தல' அஜித்துக்கும் சர்வ நிச்சயமாக எந்த பனிப்போரும், நேரடி போட்டியும் இல்லவே இல்லை. 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் இணைந்து நடித்தபோது கூட அவ்வளவு பாசமாக பழகியவர்கள் தான் இந்த இருவரும். பின் எந்த விஷயத்தில் அஜீத் முந்தினார் மம்முட்டி தெரியுமா..? சமீபத்தில் தேசிய நியூஸ் சேனலான சி.என்.என்-ஐ.பி.என் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 2015க்கான சிறந்த தென்னிந்திய முதலிடத்தை பிடித்துள்ளார் மம்முட்டி.. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'பத்தேமாறி' படத்தில் இவரது அருமையான நடிப்பிற்காக 45% பேர் மம்முட்டிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்..
23% ஓட்டுக்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் அஜித். 'என்னை அறிந்தால்' படத்தில் 'சத்யதேவ் ஐ.பி.எஸ்' அதிகாரியாக நடித்தற்காகத்தான் இவருக்கு இந்த இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 12% வாக்குகள் பெற்று 'பாகுபலி' படத்தின் நாயகன் பிரபாஸும், 'பாபநாசம்' கமல், 'என்னு நிண்டே மொய்தீன்' பிருத்விராஜ், 'ஓ காதல் கண்மணி' துல்கர் சல்மான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தை தான் 'ஐ' படத்திற்காக விக்ரம் பெற்றுள்ளார்.