‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் ஜெயம்ரவி கேரக்டரில் ராம் சரண் தேஜா நடிக்கிறார். இதில் நயன்தாரா கேரக்டரில் நடிக்க அவரையே கேட்டார்கள். மூன்று விரல்களை காட்டி அவர் சம்பளம் கேட்கவும், வேறு நடிகை தேடினார்கள். ஸ்ருதிஹாசன், சமந்தா என பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு தற்போது ராகுல் ப்ரீத்தி சிங்கை ஒப்பந்தம் செய்து விட்டார்கள்.
தமிழில் சில படங்களில் நடித்தாலும் இங்கு வெற்றி பெறமுடியாத ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து விட்டார். கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொள்கிறவர் என்கிற இமேஜ் இருப்பதால் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போதும் அவர் கையில் நான்கு படங்கள் இருக்கிறது. முன்பு கவர்ச்சியை விட்டு விலகி இருந்தவர். இப்போது அதற்கும் தயாராகி விட்டார்.