இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜெயம் ரவி - லக்ஷ்மி மேனன் நடிப்பில் பிப்ரவரி 19ல் திரைக்கு வரவுள்ள மிருதன் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட படக்குழுவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மனிதன் மிருகன் இரண்டையும் சேர்த்து தமிழில் இப்படத்திற்கு மிருதன் என பெயாரிட்ட படக்குழு தெலுங்கில் யமபாசம் என பெயரிட்டுள்ளனர். மிருதன் படத்தின் தெலுங்கு டப்பிங்கான யமபாசம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஐதராபாத்தில் நடைபெறுகின்றது. நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளார் இமான் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார். தமிழ் திரை உலகின் முதல் ஜாம்பி வகையிலான படம் என்ற அறிமுகத்தோடு திரைக்கு வரும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.