'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை லக்ஷ்மி மஞ்சு சின்னத்திரையில் தொகுத்து வழங்கவுள்ள மேமு சைதம் எனும் நிகழ்ச்சியின் புரமோஷனில் பல டோலிவுட் பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர். அண்மையில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் காய்கறி விற்று ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். தற்போது நடிகர் ராணா இந்நிகழ்ச்சியின் புரமோஷனுக்காக மூட்டை தூக்கி சம்பாதித்துள்ளார். ரைத்தூ சந்தைக்கு வந்திறங்கிய காய்கறி மூட்டைகளை ராணா தனது முதுகில் சுமந்து குடோனில் கொண்டு சேர்த்துள்ளார். இதன் மூலம் கிடைத்த வருவாயை சமூக நல அறக்கட்டளைக்கு கொடுத்துள்ளார். மேமு சைதம் நிகழ்ச்சியின் புரமோஷனில் கலந்து கொண்ட ராணாவிற்கு லக்ஷ்மி மஞ்சு நன்றி தெரிவித்துள்ளார். சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள மேமு சைதம் நிகழ்ச்சிக்கு டோலிவுட்டின் பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.