இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொதுவாக மலையாளத்தில் அறிமுகமாகும் கதாநாயகிகள் அப்படியே தமிழுக்கு வந்து ஒரு ரவுன்ட் அடித்து மார்க்கெட்டையும் கொஞ்சம் ஸ்டெடி பண்ணிக்கொண்டு பின்னர்தான் தெலுங்கு திரையுலகில் உள்ளே நுழைவார்கள். இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள அனு இம்மானுவேல், தனது இரண்டாவது படத்திற்கு அப்படியே டாப் கியரில் டோலிவுட் பக்கம் போய்விட்டார்.
ஆம்.. தெலுங்கில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் முன்னணி நடிகர் கோபிசந்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனு இம்மானுவேல். இத்தனைக்கும் இவர் நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படம் இன்னும் ரிலீஸ் கூட ஆகவில்லை. குழந்தை நட்சத்திரமாக ஜெயராமுடன் 'சொப்ன சஞ்சாரிகள்' படத்தில் நடித்த இவருக்கு நிவின்பாலி தான் ஆதர்ஷ ஹீரோ.. தனது முதல் படத்திலேயே அவருக்கு ஜோடியாக நடித்ததில் சந்தோஷப்படும் இவர்தான், துல்கர் சல்மான் ஜோடியாக 'சார்லி'யில் நடிக்க வந்த வாய்ப்பையும் வேண்டாம் என்று ஒதுக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.