‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் ராணா, பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் ராணா கப்பற்படையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் ஹசி எனும் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். நடிகை டாப்சி நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்தில், பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக பிரகாஷ்ராஜ் இப்படத்திலிருந்து விலகி விட்டார்.
தற்போது பிரகாஷ்ராஜ் நடிக்கவிருந்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் கேகே மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். சித்தார் நடிப்பில் வெளியான உதயம் என்.ஹெச் 4 படத்தில் போலீஸாக நடித்த கேகே மேனன் ஹசி படத்தின் வாயிலாக டோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். உண்மைச் சம்பவங்களைத் தழுவிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நடிக்க ஆர்வமுடன் சம்மதித்த கேகே மேனன் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்புகளிலும் கலந்து துவங்கியுள்ளாராம். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சங்கல்ப ரெட்டி இயக்குகின்றார்.