ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சர்ச்சைகளுக்கு பெயர்போன தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் சமீபத்திய வெளியீடான கில்லிங் வீரப்பன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தொடர் தோல்விகளுக்கு பின்னர் ராம் கோபால் வர்மாவிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ள கில்லிங் வீரப்பன் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முதன்மை வேடமேற்று நடித்திருந்தார். கில்லிங் வீரப்பன் படத்திற்கு முன்பே ராம் கோபால் வர்மா இயக்கிய திரைப்படம் தான் அட்டாக்.
நடிகர் மஞ்சு மனோஜ் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள அட்டாக் படத்தில் இவன் வேற மாதிரி படத்தில் நடித்த சுரபி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கெஜபதி பாபு மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை மாதமே திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட அட்டாக் படத்தின் வெளியீடு காரணங்கள் எதுவும் கூறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அட்டாக் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.