இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாளத்தில் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் ரீமேக் செய்யப்படுகின்றது. சித்தாரா எண்டர்டையின்மென்ட் பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சண்டூ மொண்டெடி இயக்கும் இப்படத்திற்கு தெலுங்கில் மஜ்னு என பெயரிட்டுள்ளனர். முன்று நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கின்றார். நாயகனின் பள்ளித் தோழியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கின்றார். இப்படத்தில் கல்லூரி பேராசிரியையாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் தனது வகுப்பில் படிக்கும் நாக சைதன்யாவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம். நடிகை ஆயிஷா சர்மா மூன்றாவது நாயகியாக இப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தின் பூஜையின் போது படப்பிடிப்பை நாக சைதன்யாவின் தம்பி அகில் கடந்த சனிக்கிழமை துவங்கி வைத்துள்ளார். டிசம்பர் 3 ஆம் தேதியிலிருந்து இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.