இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் தமன்னா இணைந்து நடித்துள்ள பெங்கால் டைகர் திரைப்படம் டிசம்பர் 10ல் வெளிவரவுள்ளது. தமன்னாவுடன் ராக்ஷி கண்ணாவும் இரண்டாவது நாயகியாக நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் சம்பத் நந்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் பீம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் எவடு ஒக்கடு எனும் படத்தில் நடிக்க ரவி தேஜா ஒப்பந்தமாகியுள்ளார். தோசெய் இயக்குனர் சுதீர் வர்,மா ரவி தேஜா நடிப்பில் ஸ்பெஷல் 26 எனும் ஹிந்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டது.ஆனால் இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. மேலும் சுதீர் பாபு கூறிய திகில் கதை ரவி தேஜாவிற்கு பிடித்து விட்டதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் ரவி தேஜா சுதீர் வர்மாவிடம் தனது ரசிகர்களுக்கேற்ப கதையில் சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருப்பதாகவும் அதற்கான பணிகளில் சுதீர் வர்மா ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.