சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் கில்லிங் வீரப்பன். கன்னடம் மற்றும் தெலுங்கில் தயாரான இப்படத்தை ஹிந்தி மற்றும் தமிழில் மொழிமாற்றம் செய்து திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்ட இப்படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
வீரப்பனின் மனைவி முத்துலக்ஷ்மி தனது கணவரை இப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஹிந்தியில் மட்டுமே படம் எடுக்க தன்னிடம் ராம் கோபால் வர்மா அனுமதி வாங்கியதாகவும் தற்போது ஹிந்தி உட்பட நான்கு மொழிகளில் இப்படத்தை திரையிடவுள்ளதாக முத்துலக்ஷ்மி கூறியுள்ளார். மேலும் இப்படத்தை முழுவதுமாக தனக்கு திரையிட்டுக் காட்ட தவறினால் இப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து வழக்கு தொடரவிருப்பதாகவும் முத்துலக்ஷ்மி கூறியுள்ளார்.
கன்னட நடிகர் சிவராஜ் குமார் இப்படத்தில் வீரப்பனை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். டில்லியைச் சேர்ந்த நாடக நடிகர் சந்தீப் வீரப்பனாக நடிக்கின்றார். கன்னட நடிகைகள் பருல் யாதவ் மற்றும் யக்னா ஷெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.