பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி சினிமா ரசிகர்களை ஈர்த்த பிரேமம் தற்போது தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் நாகசைத்தன்யா வாங்கியுள்ளார். பிரேமம் படம் எவ்வளவு அழகோ, அதேபோல படத்தின் தலைப்பும் ரம்மியமான பட்டாம்பூச்சி வடிவில் தோன்றும். தெலுங்கில் என்ன பெயர் வைக்கலாம் என்ற எண்ணிய படக்குழு தற்போது பிரேமம் படத்திற்கு மஜ்னு என்று தலைப்பு சூட்டியுள்ளனர்.
ஒரு ஆணின் பள்ளி பருவக் காதல், கல்லூரி பருவ காதல், வேலை செய்யும் பருவத்தில் உண்டாகும் காதலை மையமான கதை என்பதால் காதலுக்கு பிரபலமான மஜ்னுவின் பெயரை இப்படத்திற்கு சூட்டியுள்ளனர். பிரேமம் படத்தில் டீச்சராக வரும் சாய் பல்லவி கதாபாத்திரத்தில் நடிகை சுருதி ஹாசன் நடிக்க உள்ளார். மலையாள பிரேமம் பட்டாம்பூச்சி டைட்டில் டிசைன் போலவே மஜ்னுவும் பட்டாம்பூச்சி டிசைனாக மாறியுள்ளது.