பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மம்முட்டிக்கு இரண்டு உடன்பிறந்த இளைய சகோதரர்கள் உண்டு.. அவர்களில் இப்ராஹீம் குட்டி என்பவர் சில படங்களில் நடிகராக சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டியுள்ளார். மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை போலவே இப்ராஹீம் குட்டியின் மகன் மஹ்பூல் சல்மானும் கடந்த நான்கு வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். பெயர் சொல்லும் அளவுக்கு 'பிரேக்' தரும் படங்களிலோ, கதாபாத்திரங்களிலோ இன்னும் மஹ்பூல் சல்மான் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் வண்டி ஓரளவு சீராகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தனது பெரியப்பா மம்முட்டி கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தில் அவரது தம்பியாக நடிக்க இருக்கிறார் மஹ்பூல் சல்மான். இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் நிதின் ரெஞ்சி பணிக்கர்.. யெஸ்.. பிரபல கதாசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்டவரும், மம்முட்டியின் பல வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவருமான ரெஞ்சி பணிக்கரின் மகன்தான் இந்த நிதின். தனது தம்பி மகனுக்கு ரசிகர்களிடம் இன்னும் ஒரு நல்ல அறிமுகம் தரவேண்டும் என்பதற்காகவே மம்முட்டி படத்தில் மஹ்பூல் சல்மான் சேர்க்கப்பட்டிருக்கிறாராம்.