தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை அனுஷ்கா நடிப்பில் இன்று திரைக்கு வரும் சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி படத்திற்கு தெலுங்கானா அரசு வரி விலக்கு அளித்துள்ளது. 3D தொழில்நுட்பத்தில் இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். குணசேகர் மற்றும் இப்படத்தின் விநியோகஸ்தர் தில் ராஜு இருவரும் நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவைச் சந்தித்துள்ளனர். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவரவிருக்கும் இப்படத்தைப் பார்த்து வரி விலக்கு தருமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்ட தெலுங்கானா முதல்வர் படம் திரைக்கு வந்த பின்னர் பார்த்துக் கொள்வதாகவும் இப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தருவதாகவும் கூறியுள்ளார்.
வரலாற்றில் இடம் பிடித்த தெலுங்குதேச ராணியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கியதற்கு குணசேகரை தெலுங்கானா முதல்வர் பாராட்டியுள்ளார். இப்படத்தில் அனுஷாவுடன் அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரின் திரேஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு,தமிழ் மற்றும் மலையாளத்திலும் திரைக்கு வருகின்றது. பாகுபலியைத் தொடர்ந்து டோலிவுட்டில் வெளிவரும் வரலாற்றுத் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகர்த்துள்ளது.