வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்த நடிகை ஓவியா, தற்போது தெலுங்கு திரை உலகில் கால் பதிக்க உள்ளார். மலையாள நடிகையான ஓவியா, களவாணி படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து தமிழில் மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சண்டமாருதம் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருடன் இணைந்து ஓவியா இறுதியாக நடித்தார்.
இந்நிலையில் ஓவியா தெலுங்கு திரைப்படமொன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பிள் ஆகி ஒன்து லவ் ஸ்டோரி எனும் வெற்றி பெற்ற கன்னட படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஓவியா நாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாயகனாக நடிகர் தருண் நடிக்கவுள்ளார். எனக்கு 20 உனக்கு 18 போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ள தருண் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக தருண் நடித்த வீடா எனும் தெலுங்கு படம் தோல்வியைத் தழுவியதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த தருண் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.