Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சுட்டகதை

சுட்டகதை,Suttakathai
31 அக், 2013 - 17:44 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சுட்டகதை

தினமலர் விமர்சனம்



தாறுமாறான ஓட்டைகளுடன்... சுட்ட கதை.

கோரமலை பழங்குடி மக்கள் தலைவனான ஒட்டகம் (எம்.எஸ்.பாஸ்க்ர), தன் நெற்றியில் ‘தோட்டா’ தாங்கியபடி, சிரித்த முகத்துடன் சரியும் அந்த ‘திகில்’(?!) காட்சியில் தொடங்குகிறது... சுட்ட கதை. ராம்கியும் (பாலாஜி), சங்கிலியும் (வெங்கி) கோரமலை காவல் நிலையத்தில் பணிக்கு சேர்கிறார்கள். ஒட்டகத்தை கொன்றது யார்? என கண்டுபிடிக்க அல்ல! எந்நேரமும் சமோசாவும், தூக்கமுமாக இருக்கும் இன்ஸ்பெக்டர் திருமேனியின் (நாசர்) வீட்டு வேலைகளைச் செய்ய! சுட்டகதை ‘நகைச்சுவை படம்’ என்பதால், இந்த இடத்தில் நாசர் சிரிக்கிறார். பாவம்... அவர் மட்டுமே சிரிக்கிறார்! இப்படி, நகைச்சுவை ததும்ப(!) தொடங்கும் கதையில், இடைவேளையின்போது ஒரு ‘ட்விஸ்ட்’. கான்ஸ்டபிள் ராம்கியும், ஜீப் ஓட்டுனரான சங்கிலியும், ‘கெட்ட’ போதையில், திருமேனியின் துப்பாக்கியை எடுத்து விளையாட... டுமீட்! சுட்டது ராம்கி. சத்தமில்லாமல் சுருண்டது... ட்விஸ்ட் (ஜெயப்பிரகாஷ்). (செம ‘ட்விஸ்ட்’டுப்பா!). ஆனா, செத்தது ஆலிவர் ட்‌விஸ்ட் இல்ல! பின்னே! வீரகேசரி (ஆர்.எஸ்.சிவாஜி). அடடே... இது யாரு? அது... அது... அதுதான் க்ளைமாக்ஸ்.

படத்தில் வரும் முக்கிய ஆண் கதாபாத்திரங்கள் அனைவரும், ‘பென்சில்’ மீசை வைத்திருக்கிறார்கள் என்பது படத்தின் சிறப்பம்சம்! மற்றபடி... ‘எப்படி நடிச்ச ஆளுப்பா! இவரு போய்...’ என, ரசிகனை வருத்தப்பட வைக்கிறார் நாசர். படத்தின் நாயகர்கள் என சொல்லப்படும் இருவரும், ஏதேதோ செய்தும், பேசியும் வித்தை காட்டுகிறார்கள். ஆனால்... அத்தனையும் வீண்! படத்தில் ஒரு நாயகியும் உண்டு. அடிக்கடி பிணம் சுமக்கும் அந்த பாவையின்பெயர் சிலந்தி(லஷ்மிபிரியா)!

‘கதை வேண்டாம்! வித்தியாசமான விளம்பரங்கள் போதும். ரசிகன் நிச்சயம் திரை அரங்கிற்கு வருவான்!’ என்ற நம்பிக்கையுடன் படத்தை இயக்கியிருக்கிறார் சுபு. அவருக்கு வெற்றி! ரசிகனுக்கு.... மரண அடி!

மொத்தத்தில் ‘சுட்ட கதை’ - ‘அது வருது ஓடிருங்க’.


ரசிகன் குரல்: ‘காமெடி’ங்கற பேர்ல ஏன் மச்சி இப்படிகொல்றானுங்க?




-----------------------------

 


நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


டைட்டிலை பார்த்ததும் வழக்கமாக நம்மூர் சில இயக்குநர்கள் ஹாலிவுட், கொரியப்படங்களை சுட்டு கதை பண்ணுவாங்களே அந்த மாதிரின்னு நினைக்கத்தோணும், ஆனா இது ஒரு ஆளை துப்பாக்கியால ஒருத்தன் சுட்ட கதை. கொலையாளி யார்? என்பதை கண்டு பிடிக்கும் டிடெக்டிவ்  காமெடி ஸ்டோரி.

மலைவாழ் மக்கள் வாழும் ஒரு கிராமம். அங்கே இருக்கும் எல்லாரும்  திருட்டுப்பசங்க. அங்கே  இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல  புதுசா வேலைக்குச்சேரும் 2 கான்ஸ்டபிள்கள் மலைவாழ் மக்களின் தலைவனின் மகள் லேடி ஜெட்லீ மாதிரி இருக்கும் பொண்ணை காதலிக்கறாங்க. அந்த பொண்ணு கிட்டே தங்கள் காதலை வெளிப்படுத்தி 2 பேர்ல யாரோ ஒருவரை காதலிக்கனும்னு சொல்றாங்க. அந்த டைம்ல அந்தப்பொண்ணோட அப்பாவை யாரோ கொலை பண்ணிடறாங்க. பொண்ணு அப்பாவைக் கொன்னவங்களை பழிவாங்க நினைக்குது. அந்த 2 போலீஸும் உதவுறாங்க. யார் கொன்னது? எதுக்கு கொன்னாங்க? என்பதே மீதிக்கதை.

தமிழில், ஒரு வித்தியாசமான காமெடி கதையை, புதியதாக ஒரு திரைக்கதை வடிவத்தை காட்டணும்கற ஆர்வம் இயக்குநருக்கு அபாரமா இருக்கு. ஆனா ஆர்வம் இருந்த அளவு அவர் ஹோம் ஒர்க் பண்ணலை. அதனால திரைக்கதை தடுமாறுது. 110 நிமிடம் கூட ஓடாத சின்னப்படம் தான், ஆனா ரொம்ப இழுக்குது.

பாலாஜி, வெங்கடேஷ்  இருவரும்  ஹீரோக்கள். நாகேஷ், சந்திரபாபு பாணியில் நடிக்க முயற்சி பண்ணி இருக்காங்க. பாராட்டத்தக்க முயற்சி. 2 பேருக்கும் பாடி லேங்குவேஜ் நல்லா வருது. வடிவேலுக்குப்பின் காமெடி நடிகர்களில் பாடி லேங்குவேஜில் யாரும் கலக்கவில்லை. அந்தக்குறையை இவர்கள் தீர்த்து வைக்க வாய்ப்பு இருக்கு.

ஹீரோயினாக லட்சுமிப்ரியா. இவர் ஆல்ரெடி கவுரவம் படத்தில் நடித்தவர். இந்தியன் கிரிக்கெட் டீமில்  இருந்தவர். நஸ்ரியா பாணியில் மிகக்கறாராக ஆடை விலகாமல் கண்ணியமாக வந்து போகிறார். தமிழ் சினிமா இவரை பயன்படுத்திக் கொள்வது நலம்.

நாசர், மகளிர் மட்டும் படத்தில் வருவது போல் ஒரு முழு நீள காமெடிப்படத்தில் சைன் பண்ணிடலாம் என கணக்குப்போட்டு இருக்கிறார். பாதிக்கிணறு கூட தாண்டவில்லை. ஆனால், அவர் அளவில் நடிப்பில் குறை சொல்ல முடியாது. குட்!

எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்ரகாஷ், லட்சுமிராமகிருஷ்ணன் என ஏகப்பட்ட கேரக்டர்கள். வந்த வரை  ஓக்கே ரகம்.


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. சாம்பசிவம் காமிக்ஸ் காட்சிகள் படத்தில் ஒரு புதுமை. படத்தில்  ஹீரோக்கள் துப்பறியும் காட்சிகளில் காமிக்ஸ் காட்சியை இணைத்தது நல்ல ஐடியா. தமிழ் சினிமாவில் யாரும் இதுவரை காட்டாத காட்சி.

2. படத்தின்  பின்னணி இசை அபாரம். ஒரு காமெடிப்படத்துக்கு இசையால் சிரிக்க வைப்பது  ரொம்ப  முக்கியம். அதை இந்தப்படம் பரிபூரணமா நிறைவேத்தி இருக்கு. மேட்லீ ப்ளூஸ் தான் இசை. ஆங்காங்கே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையை பயன்படுத்தி இருப்பது அடடே ரகம்.

3 கான்ஸ்ட;பிள் சிங்காரம் வரும் காட்சிகளில் எல்லாம் தண்ணி டேங்க் சத்தத்தை பின்னணி இசையாக கொடுத்த காட்சிகள் செம காமெடி. 2 ஹீரோக்களில் ஒருவருக்கு நினைத்தாலே இனிக்கும்  ரஜினி மாதிரி எதையாவது திருடும் குணம் இருப்பதும், இன்னொரு ஹீரோவுக்கு ஒன் சைடு காது டமாரம் என்பதையும் வைத்து அமைக்கப்பட்ட காமெடிக்காட்சிகள் ஓகே  ரகம். (இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளை வைத்து காமெடி பண்ணுவதை இனி தவிர்க்கலாம்)


இயக்குநரிடம்  சில  கேள்விகள்

1. கதையோடு ஆடியன்ஸ் ஒன்றி விட வேண்டும் எனில்  முதல்ல கேரக்டர்களை அந்நியோன்யமா காட்டிடணும். யார் எவர்னே தெரியாத ஆள், கொலை செய்யப்படுதல், ஹீரோயின் யாரையும் லவ்வலை என்பதெல்லாம் சுவராஸ்யம் குறைந்த காட்சி அமைப்புகள்.

2. கதை நடக்கும் கால கட்டம் 1970 என்பது போல் காட்டறாங்க. ஆனா ஹீரோயினை, ஹீரோக்கள் நீ விஜய சாந்தி மாதிரி  இருக்கே  என சொல்வது எப்படி?

3. காட்டுக்குள் இரவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் லைட்டிங்க் ஓவர் . ரொம்ப செயற்கை . இயற்கையான ஒளிப்பதிவு முக்கியம் . கொடைக்கானலில் அத்தனை லைட் ஏது ?

சி.பி. கமெண்ட் : வித்தியாசமான காமெடி படம். பார்க்கும் ஆர்வம் உள்ள ரசிகர்கள் பார்க்கலாம், பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு. ரொம்ப சின்னப்படம் என்பதால் நெளிய வைக்கவெல்லாம் இல்லை. படம்  முழுக்க ஆடியன்ஸ் ரசிச்சு சிரிச்சாங்க. ஏ செண்ட்டர்ல ஓரளவு ஓடிடும்.



வாசகர் கருத்து (2)

Mathivanan - Madurai  ( Posted via: Dinamalar Android App )
09 நவ, 2013 - 00:42 Report Abuse
Mathivanan படம் எடுத்கு பழகுராங்க அருமை அருமை
Rate this:
vijayraja - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
27 அக், 2013 - 20:17 Report Abuse
vijayraja மொக்க படத்தை ரொம்ப மொக்கையா எடுத்து இருக்காங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in