Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

முதல் தகவல் அறிக்கை

முதல் தகவல் அறிக்கை,Mudhal Thagaval Arikkai
  • முதல் தகவல் அறிக்கை
  • ..
  • ..
  • இயக்குனர்: ராஜ கணேசன்
12 ஏப், 2016 - 17:35 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » முதல் தகவல் அறிக்கை

தினமலர் விமர்சனம்


வெள்ளித்திரை டாக்கீஸ் எனும் பேனரில் ஏ.ஆர்.முஜீப் தயாரிக்க, விலாசம் படத்தின் இயக்குனர் பா.ராஜகணேசனின் எழுத்து, இயக்கத்தில் போலீசின் குரூர முகத்தை தோலுரிக்கும் விசாரணை மாதிரியான மற்றொரு படமாக வெளிவந்திருக்கிறது முதல் தகவல் அறிக்கை F.I.R எனும் திரைப்படம் !


ஓர் உண்மைச் சம்பவத்தினை பின்னணியாக கொண்ட இப்படத்தின் கதைப்படி,. ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையை, கற்பழிப்பு கொலையை... தனக்கு சாதகமானவர்களின் நலன் கருதி போலீஸ் எப்படி, அணுகுகிறது ..? அந்த குற்றத்தை எப்படி, எப். ஐ.ஆர். பதிவு செய்கிறது ..? அதனால் குற்றவாளிகள் எப்படி தப்பிக்கின்றனர்? எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள்..? அவர்கள் வெகுண்டெழுந்து பழிக்குப்பழி களம் இறங்கினால் .... என்னவாகும். .? என்பதை அழகான கதையாக்கி அம்சமாக காட்சி படுத்தியிருக்கின்றனர் முதல் தகவல் அறிக்கை F.l.R படக் குழுவினர்.


வெவ்வேறு குடும்ப சூழலைக் கொண்ட நான்கு இளைஞர்கள், செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் நால்வரும் சிறையில் இருந்து வெளிவந்ததும் அந்த குற்றத்தை செய்தவர்களையும், அவர்களை காசுக்காக காப்பாற்றிய போலீஸையும் போட்டுத் தள்ளும் நான்கு இளைஞர்களில் நாயகனாக ரயான் ராஜ்ஜும், அவரது நண்பர்களாக வரும் இளைஞர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.


ரயான் ராஜின் ப்ளாஷ்பேக் காதலியாக, கதையின் நாயகியாக கல்பனா ஜெயமும் நன்றாகவே நடித்துள்ளார்.


புதுமுகவில்லன், வில்லன் உள்ளிட்டவர்களால் பலாத்கரம் செய்யப்படும் இளம் பெண், அவரது பாசக்கார தம்பி, ஹீரோவின் தியேட்டர் ஒனர் சித்தப்பா உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம் என்றாலும் படத்தில் சப் இன்ஸ் கம்., இன்ஸ்பெக்டராக வந்து ஹீரோ உள்ளிட்ட நான்கு இளைஞர்களுக்கும் இம்சையைக் கொடுத்து உள்ளே தள்ளும் அந்த இளம் நடிகர் செமயாய் நடித்திருக்கிறார். இவர்தான் இப்படத் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முஜீப் பாம்!


அது மட்டுமல்ல ... இப்படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த இவர், இந்தப்படத்தில், இப்படி., முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் நடிகராகியதோடு இப்படம் பொருளாதார பிரச்சினையில் இருப்பதை அறிந்து இந்தப் படத்தின் தயாரிப்பை தானே எற்றுக்கொண்டு படத்தைமுடித்து ரிலீஸும் செய்து இருக்கிறார். ஏ.ஆர்.முஜீப் மாதிரி நடிகர் தயாரிப்பாளர் தான் கோடம்பாக்கத்திற்கு தேவை! வாவ்!


ராஜபார்த்திபனின் ஒளிப்பதிவில் மன்னார்குடி தேர் திருவிழா மற்றும், நாயகன் , நாயகியின் கிராமிய காதல் எபிசோட்... உள்ளிட்டவை ரசனை பதிவு! ரங்கீஷ் சந்திரசேகரின் படத்தொகுப்பிலும் பெரிதாய் பழுதில்லை.. ரவிராகவின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் பரவாயில்லை

!


விலாசம் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்கியுள்ள பா. ராஜகணேசன்., அப்பா அம்மா செல்லம் படத்துக்காக சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர். இவர், சிறந்த திரைக்கதையாளர் என்பது இப்படத் திரைக்கதையிலும் தெரிகிறது. இயக்கத்தில் இன்னும் தெரிந்திருக்கலாம்.


மலையையே முழுங்கிட்டு எல்லைக் கல்லு மாதிரி நிக்கிறான் பாரு ... , பணம் இப்போ எல்லார்கிட்டேயும் இருக்கு வீரமணி .. உள்ளிட்ட அர்த்தபுஷ்டி வசனங்களுடன்

பா.ராஜ கணேசனின் எழுத்து , இயக்கத்தில் ஏறக்குறையஇன்னொரு விசாரணையாக, போலீசின் குரூர முகத்தைத் தோலுரிக்கும் கதையம்சத்துடன் இதுவரை, தமிழ் சினிமாவில் பார்த்திராத பிரமாண்ட மன்னார்குடி தேரோட்டம்., அதற்கு இணையான சம்பவங்கள் , திருப்பங்கள்... சஸ்பென்ஸ் சென்டிமெண்ட் நிரம்பிய க்ளைமாக்ஸை உடைய காட்சியமைப்புகளுடன் முதல் தகவல் அறிக்கை F .I. R படத்தை முதல்தரமாக தூக்கிப் பிடிக்க முயற்சித்து அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றனர் இப்படக் குழுவினர்!


ஆக மொத்தத்தில், ஒரு சில குறைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்தாலும், தெரிந்தாலும்... முதல் தகவல் அறிக்கை கம்மி பட்ஜெட்டில் வந்துள்ள முதல் தரத் திரைப்படம்... என்பது நம் விமர்சன அறிக்கை!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in