Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சேட்டை

சேட்டை,Settai
18 ஏப், 2013 - 12:17 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சேட்டை

   

தினமலர் விமர்சனம்


ஆரம்பம் முதல் இறுதி வரை படம் முழுக்க மோஷன் போவதை பற்றி மட்டுமே பேசியிருக்கும், காட்சிப்படுத்தியிருக்கும் யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸின் மோசமான படம் தான் "சேட்டை" என்றால் மிகையல்ல!

பின்ன என்னங்க?! ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, நாசர், ஷாயாஜி ஷிண்டே, சித்ரா லட்சுமணன், ஹன்சிகா, அஞ்சலின்னு பெரிய பெரிய நடிகர், நடிகையையெல்லாம் வச்சுகிட்டு, படம் முழுக்க சந்தானத்துக்கு வயிற்றை கலக்குவதையும் அவர் கண்டவன் வீட்டில் கக்கா போவதையும், கார்பன்டை ஆக்சைடு கேஸ் ரிலீஸ் செய்வதையுமே காட்சிப்படுத்தி நம்மை கஷ்டப்படுத்தி தியேட்டரை நாறடித்து விடுகிறார்கள் என்றால் பாருங்களேன்! இதில் "டில்லி பெல்லி எனும் இந்திப்படத்தின் ரீ-மேக் என்ற பில்-டப் வேறு!

"கோ மாதிரி பத்திரிகையாளர்களின் பராக்கிரமம் பேசும் படங்கள் வந்த தமிழ் சினிமாவில், இது மாதிரி பத்திரிகையாளர்களை பழிக்கு பழிவாங்கும் கதைகளும் வெளிவருவது கொடுமை! ஆர்யா, பிரேம்ஜி ஆ‌கியோரது நடிப்பு, அஞ்சலி, ஹன்சிகாவின் இளமை துடிப்பு உள்ளிட்டவைகளை, சந்தானத்தின் அதிர்வேட்டுகள் அமுக்கிவிடுவதால் அவைப்பற்றியெல்லாம் நோ கமெண்ட்ஸ்.

ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி மூவரும் ஒரே தமிழ் தினசரியில் நிருபர், புகைப்பட நிருபர், கார்ட்டூனிஸ்ட்களாக வேலை பார்க்கும் தோஸ்துகள், அஞ்சலி ஆங்கிலப்பத்திரிகை நிருபர். ஹன்சிகா, ஆர்யாவை தான் சார்ந்திருக்கும் மேல்தட்டு நாகரீகத்துக்கு அழைத்து போகத்துடிக்கும் ஏர்ஹோஸ்டஸ். அவர் கையில் தரப்படும் ஒரு பார்சலை ஆர்யா மூலம் நாசருக்கு தரச்சொல்கிறார். ஆர்யாவோ, சந்தானத்திடம் தருகிறார். சந்தானமோ, பிரேம்ஜியிடம் தருகிறார். கூடவே இலியானா சிக்கன் சாப்பிட்டதால் நிக்காமல் போகும் தன் மலத்தையும் ஒரு டப்பாவில் பிடித்து, போகும் வழியில் லேபில் டெஸ்ட்க்கு கொடுத்துவிட்டு போக சொல்கிறார். பார்சல் மாறுகிறது! நாசர் வருகிறார். ஆயை ஆராய்ச்சி பண்ணி ஆர்யா, சந்தானத்தை அடித்து உதைத்து தன் வைர பார்சலை கொடுத்து விட சொல்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? அந்த பார்சலில் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரம் இருப்பது தெரிந்ததும் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி மூவரும் அதை காசாக்கி கரையேற நினைக்கின்றனர். விடுவாரா நாசர்? இறுதியில் ஜெயித்தது அந்த மூவரா? நாசரா...? என்பது க்ளைமாக்ஸ்!

இந்த கதையையும், காட்சிகளையும் விட அடிக்கடி சந்தானம் வயிற்றை பிடித்து கொண்டு ஆசன வாயால் பேசும் காட்சிகள் தான் அதிகம் என்பதால் படம் முழுக்க போரடிக்கிறது. நாரடிக்கிறது!

எஸ்.எஸ்.தமனின் இசை, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, ஆர்.கண்ணனின் இயக்கம் என எல்லாம் இருந்தும் படம் மொத்தமும், மலமும் மலம் சார்ந்த இடமும்மாக இருப்பது கொடுமை!

மொத்தத்தில், "சேட்டை" - கோட்டை விட்ட "குசு மூட்டை (இந்த அருவெறுப்பான வார்த்தையை இந்த இடத்தில் நாம் பயன்படுத்தியதற்கு சேட்டையை முழுசாக பார்த்த துணிச்சல் தான் காரணம்)!"



-----------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்



வடக்கே சக்கைப்போடு போட்ட “டெல்லி பெல்லி’யின் கலகல தமிழ் வடிவம்.

கடத்தல் வைர டப்பாவையும், சந்தானத்தின் “கக்கா’ டப்பாவும் கை மாறிப் போக நடக்கும் காமெடி கலாட்டாதான் சேட்டை.

தீப்பெட்டி டப்பாவுக்குள் அடைக்கக்கூடிய சின்ன கதைதான் என்றாலும் சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறு காட்டியிருக்கிறாரர் இயக்குநர் ஆர்.கண்ணன்.

லட்டு திங்க ஆசை என்று ஒன்றுக்கு இரண்டாய்ச் சாப்பிடுகிறார் ஆர்யா.

படம் முழுக்க சிரிப்பலைகளை எழுப்புகிறார் சந்தானம். ஏதோ கோழிக் கறியைச் சாப்பிட்டுவிட்டு படம் பூராவும் அவர் சப்தமெழ “கக்கா’ போவதை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள். அந்த கக்கா சமாசாரத்தை வைரம் என்று நினைத்து நாசர், மேசை மேல் கொட்டி பார்க்கும்போது தியேட்டரில் சோளப்பொறி சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், மேலும் சாப்பிடப் பிடிக்காமல் “உவ்வே’ செய்கிறார்கள்.

பங்களாவாயன் பிரேம்ஜிக்கு தனி டான்ஸ் வேறு சகிக்கவில்லை. ஹன்சிகா இளைத்திருக்கிறார். அஞ்சலி பருத்திருக்கிறார்.

மும்பையையும், வெளிநாட்டையும் முத்தையாவின் ஒளிப்பதிவு குளுமையாகக் காண்பிக்கிறது.

தமனின் இசையில் “அகலாதே’ பாடல் மனசை விட்டு அகலாமல் இருக்கிறது.

சேட்டை - மூக்கைப் பொத்திக் கொண்டு சிரிக்கலாம்.

குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து (12)

navasathishkumar - MADURAI,இந்தியா
18 ஏப், 2013 - 23:40 Report Abuse
navasathishkumar இந்த படத்தில் கதையே இல்லை, கக்கா தான் இருகின்றது. ஆனால் director கண்ணன் ஏதோ நகைசுவை படம் , ஹிட்டு அப்படின்னு சொல்லுறப்ப நமக்கு வயிறு எரியுது . என்னையா கதை ? தமிழ் பட உலகத்தில் நகைச்சுவை படம் ஜெயித்தால் உடனே காக்காவை கூட கையில் எடுபீன்களா ? கருமம் , கண்ணனின் ஜெயம்கொண்டான் படத்தை டைரக்டர் மணிரத்தினம் கதை சரியில்லை என்றாராம் , இந்த கதையை சொல்லிருந்தால் மூக்கை பொத்தி கண்ணனை விரட்டி இருப்பார் , ஒன்னும் இல்லை படத்தில். இதில் அஞ்சலி , ஹன்ஷிகா , ஓட்டை வீடு தமிழ் பத்திரிகை அலுவலகம் நல்லா இருக்கும் வேலை பார்ப்பவன் நடுப்பக்கம் நக்கி மாதிரி அந்து போகும் வீட்டில் தான் இருப்பான் , நிருபர்களின் தலைவிதி என்று கண்ணன் சொல்வதில் உண்மை இருக்கும் , தலை தெறிக்க ஓடும் இவர்களுக்கு சாப்பாடு போடுவது pressmeet அந்த வகையில் வேண்டுமானால் பாராட்டலாம் ,சேட்டை கண்ணன் ஜட்டியில் oh சாரி carrier இல் விழுந்த பெரிய ஓட்டை .
Rate this:
Padmavathi - Chennai,இந்தியா
09 ஏப், 2013 - 15:42 Report Abuse
Padmavathi படம் செம மொக்கை காசு கொடுத்து தலைவலி வாங்கினோம்
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
08 ஏப், 2013 - 13:32 Report Abuse
itashokkumar ஹன்ஷிகா மற்றும் அஞ்சலியின் கவர்ச்சியை நம்பி கதையே இல்லாமல் கேமராவை தூக்கி கொண்டு கிளம்பி விட்டார்கள் போல. ஆர்யா நல்ல நடிகர் அவர் நடிகைகளிடம் கல்லை போடுவது மற்றும் இது போன்ற குப்பை படங்களில் நடிப்பதன் முலம் காசு மட்டுமே பார்க்க முடியும். சந்தானம் நிறைய காசு பண்ணலாம் ஆனால் அவருடைய பட காட்சிகளை திரும்ப பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள், நாகேஷ் கவுண்டமணி செந்தில் போன்றவர்கள் நடித்தவற்றை எப்போதும் பர்க்கும்படிதான் உள்ளது. சந்தானம் அவருக்கு தெரிந்ததை மட்டும் தானே செய்ய முடியும் நாம் தான் இந்த குப்பைகளை விலக்கி கொள்ள வேண்டும்.
Rate this:
kutti - chennai,இந்தியா
15 ஏப், 2013 - 09:37Report Abuse
kuttiகௌண்டமனியும் இது போன்ற scenes இல் நடித்துள்ளார்..சந்தனம் சிரிக்க வைத்தது உண்மை..அதற்காக இந்த toilet ஜோக்ஸ் க மட்டும் நம்பி கதை பண்ணி இருப்பது அபத்தம்.....
Rate this:
zebra - Chennai,இந்தியா
07 ஏப், 2013 - 18:17 Report Abuse
zebra சந்தானம் நகைச்சுவை என்கின்ற பெயரில் சக மூத்த நடிகர்களை அவதூராக பேசுவது மற்றும் தேவையே இல்லாமல் அவமரியதையோடு பேசுவது , நிச்சயம் அடுத்த சமுதாயத்தை பாதிக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. இனியாவது இயக்குனர்கள் இதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்
Rate this:
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
07 ஏப், 2013 - 14:05 Report Abuse
ரெட்டைவால் ரெங்குடு விமர்சனம் பிடிக்கவில்லை... படத்தை விட்டுவிடுவோம். நகைச்சுவை யென்றால் இதெல்லாம் தான் நகைச்சுவை... இதெல்லாம் காமிச்சா நகைச்சுவை இல்லை... இப்படி காமிகிறது அருவெறுப்பு... இப்படி உங்களுக்கு நீங்களே போட்டுகிட்ட வட்டத்துக்குள் இருந்து வெளி வரவும். நீங்கள் உலகத்தரம் என்று தம்பட்டம் அடிக்கும் கொரியா மொழி நகைச்சுவை படங்களை பார்க்கவும். உங்கள் கருத்து படி மலம் என்கிற வார்த்தையே அருவெறுப்பு? அப்போ குழந்தை வளர்க்கும் தாய் , நோயாளியை கவனிக்கும் செவிலிப்பெண், மருத்துவர், சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளி இவர்கலஎல்லாம் அருவெறுப்பா? அப்படியென்றால் இனிமேல் அந்த அருவெறுப்பான 'மலத்தை' கழிக்காமல் இருந்த்துவிடுங்கள். 'A' certificate படம் தானே.. அதை தெரிந்தது தானே பொய் பார்த்தீர்கள். டெல்லி பெல்லி படத்தில் இருந்த நிறைய பகுதிகள் காணவில்லை. அப்படியென்றால் வடனட்டுகரனை விட நீங்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்கள? உங்களை நினைத்தால்..... 'பேசும்படம்' படத்தில் இதுபோன்ற கட்சிகள் இருந்தது. அருவெறுப்பு என்று யாரும் சித்தரிக்க வில்லை. (பின்குறிப்பு:- அருவெறுப்பு என்ற வர்தைகாக தான் எனது கருத்து, விமர்சனத்துக்கு இல்லை..)
Rate this:
Joshua - tiruchirapalli,இந்தியா
11 ஏப், 2013 - 18:30Report Abuse
Joshuaசரியாய் சொன்னீங்க உதைக்கிறதும் அடிவாங்க்றதும் நகைசுவைன்னன்னா இதுவும் நகைச்சுவைதானே ...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

சேட்டை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in