Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மெளன குரு

மெளன குரு,Mouna Guru
01 ஜன, 2012 - 10:57 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மெளன குரு

 தினமலர் விமர்சனம்


அதிகார வர்க்கம் நினைத்தால் ஒரு சாமான்யனை எப்படி, எப்படி எல்லாம் படுத்த முடியம் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்து காட்டியிருக்கும் கலக்கலான, கதையம்சம் உடைய படம் தான் "மெளன குரு" மொத்தமும்!

எந்த தப்புமே செய்யாதே ஹீரோ அருள்நிதி, போலீஸ் செய்யும் ‌‌தொடர் தவறுகளால் அதோகதி ஆகிறார்! அதற்காக ஆக்ஷன் அவதாரம் எடுத்து போலீஸை, அருள்நிதி அடித்து துவம்சம் பண்ணுகிறார்... இதுதானே மெளனகுரு கதை... என நீங்கள் யூகித்தால் அதுதான் இல்லை! பொல்லாத போலீஸை பொறுப்புள்ள பெண் போலீஸ் ஒருவரே பார்த்து கொள்கிறார். அருள்நிதி, காதல், கல்லூரி, என மவுனமாக தன் கடமையை செய்வதோடு சரி! இதுதான் காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்குமோ? என எதிர்பார்ப்பை கூட்டி விடும் மெளன குரு படத்தின் பெரிய ப்ளஸ்!

பன்ச் டயலாக், வாயில் சதா சர்வ காலமும் புகையும் சிகரெட், சரக்கு, சைடீஸ், சப்போர்ட்டுக்கு சுற்றிலும் நான்கு காமெடி பீஸ் என ஹீரோயிசம் காட்டும் ஹீரோக்களுக்கு மத்தியில் இது எதுவுமே இல்லாமல் மெளனமாகவே படம் முழுக்க நடித்து ஹீரோவாகவே வாழ்ந்திருக்கிறார் அருள்நிதி!

ஹீரோயின் இனியாவும், தன் பங்கிற்கு இயல்பாக நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். ஆனாலும் மருத்துவக்கல்லூரி மாணவி தன் வருங்கால மணாளனுக்கு என்ன விதமான இன்ஜக்ஷ்ன் ‌போடப்படுகிறது? எதுமாதிரி ட்ரீட்மெண்ட் தரப்படுகிறது? என்று கூட காலி இன்ஜக்ஷன் குப்பியை எடுத்து பார்க்காமலும், திடீரென மனநோயாளியாக மாற்றப்படும் ஹீரோ அருள்நிதிக்கு தரப்படும் சிகிச்சைகளை ஏரெடுத்துப் பார்க்காமலும் இருப்பது சுத்த போர்! இதை யதார்த்தமாக கதை சொன்ன இயக்குநர், நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

ஃபோர்ஜரி போலீஸ்கள் ஜான் விஜய், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி மூவரும் மிரட்டலாக நடித்திருக்கின்றனர் என்றால், வாயும் வயிறுமாக நேர்மையான பிள்ளைதாச்சி பெண் போலீஸாக வரும் உமா ரியாஸ்கான் அவர்களைக் காட்டிலும் மிரட்டலாக நடித்து படத்தை பக்காவாக தூக்கி நிறுத்தி இருக்கிறார்.  அம்மா சுஜாதா, மது, மென்ட்டல் ஆஸ்பத்திரியில் வரும் நண்பன் முருகதாஸ், ஹரிஷ் உள்ளிட்டவர்களும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!

எஸ்.தமனின் இனிய இசை, மகேஷ் முத்துச்சாமியின் யதார்த்த ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்னும் பல ப்ளஸ் பாயிண்டுகளுடன் சாந்தகுமாரின் சறுக்காத எழுத்து இயக்கத்தில் "மெளனகுரு"விற்கு சுத்தமான, சத்தமான வெற்றி நிச்சயம்! மெளனகுரு - "மிரட்டல் குரு"


-------------------------------------------------------


குமுதம் விமர்சனம்



சுற்றியுள்ளவர்களின் அலட்சியத்தால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாகி, கடைசியில் போலீஸ் என்கவுன்டர் வரை எதிர்கொள்பவன் தான் மௌனகுரு.

அமைதியான கல்லூரி மாணவன் கருணா கேரக்டரை அருள்நிதி தன் உழைப்பால் மெருகேற்றியிருக்கிறார். சாலை மறியலில் துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து மற்ற மாணவர்கள் ஓடிவிட, அருள்நிதி ஒற்றை ஆளாக நிற்பது யதார்த்தமான ஹீரோயிசம். வீட்டுக்கு பயந்தபடி அருள்நிதியைக் காதலிக்கும் இனியாவின் எக்ஸ்பிரஷன்கள் கொள்ளை அழகு. காக்கிச்சட்டை போட்ட கிரிமினலாக உலாவரும் போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு ஜான் விஜய் சரியான சாய்ஸ்.

அருள்நிதியை நொந்து கொண்டேயிருக்கும் அம்மா சுஜாதா, போலீஸிடம் மாட்டிக்கொண்டு பரிதவிக்கும் பாலியல் தொழிலாளி காஜல், வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் அவஸ்தையோடு கொலை வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் உமா ரியாஸ்கான் உள்பட ஒவ்வொரு கேரக்டரிலும் முழுமை மிளிர்கிறது. திரில்லருக்கேற்ற மிரட்டலான பின்னணி இசையை தமன் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு அபாரம்.

ஒரு திரில்லர் கதையில் விறுவிறுப்பு குறையாமல், சாட்டையடியால் சமூக விமர்சனமும் செய்துள்ள இயக்குநர் சாந்தகுமார் வரவேற்கப்பட வேண்டிய புதுவரவு.

மௌனகுரு - சத்தமில்லாத சாதனை

குமுதம் ரேட்டிங் - நன்று



வாசகர் கருத்து (82)

karthik - maraimalai nagar,இந்தியா
22 பிப், 2012 - 19:50 Report Abuse
 karthik First half is superb. But second half is very bore
Rate this:
ஸ்ரீனி - japan,இந்தியா
04 பிப், 2012 - 20:43 Report Abuse
  ஸ்ரீனி மிக மிக அருமையாக எடுக்கப்பட்ட அற்புதமான படம்
Rate this:
samyussufmeeran - Rajagambiram,இந்தியா
25 ஜன, 2012 - 07:46 Report Abuse
 samyussufmeeran எ குட் பிலிம் இன் தி இயர், அண்ட் குட் கமெண்ட்ஸ்.
Rate this:
செல்வம் - coimbatore,இந்தியா
24 ஜன, 2012 - 22:36 Report Abuse
 செல்வம் மன்னித்து விடுங்கள் அருள்நிதி. உங்களுடைய இந்த படம் திருட்டு vcd பார்த்து விட்டு இதை திரைஅரங்கில் பார்க்க வேண்டிய படம் என்று மற்றொரு முறையும் சென்று பார்த்தேன். அருமையான உழைப்பு. நீங்கள் திருடர்கள் முன்னேற்ற கழகத்தில் கொள்ளை அடித்த பணமோ என்று எண்ணி விட்டேன். ஆனால் உண்மையான நடிப்பும், மிக எதார்த்தமான இயக்கமும் எல்லோரையும் கவரும், எந்த வித கவர்ச்சியும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்தா?
Rate this:
Kalai - Chennai,இந்தியா
23 ஜன, 2012 - 16:04 Report Abuse
 Kalai Good film.
Rate this:
மேலும் 77 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in