Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தப்பு

தப்பு,thappu
  • தப்பு
  • விவின்
  • நடிகை:ராணி சதுர்வேதி
  • இயக்குனர்: அகிலன்
25 பிப், 2011 - 22:14 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தப்பு


தினமலர் விமர்சனம்



கள்ளஉறவு, நல்உறவுகளையும் ஏன்? உயிரையும் கூட நம்மிடமிருந்து பிரித்துவிடும் எனும் மெசேஜ் சொல்லி வந்திருக்கும் படம்தான் "தப்பு"!

காதலித்து ஆசை ஆசையாய் கரம் பிடித்த மனைவிக்கு துரோகம் செய்கிறான் கணவன்! அந்த கள்ள காதலியின் கட்டளைபடி தொட்டு தாலி கட்டிய மனைவியையே தீர்த்துகட்ட ஒரு ஆளை ஏற்பாடு செய்கிறான். விபரம் தெரிந்த மனைவி‌யோ கணவன் ஏற்பாடு செய்த ஆள்மூலமே புருஷனை போட்டுத் தள்ள பிளான் பண்ணுகிறார். வென்றது யார்? கொன்றது யார்? என்பது "தப்பு" படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை!

விவின், அஜய், ராணி சதுர்வேதி, ஜெனிஃபர், என்.எஸ்.பாலன் என அரைடஜனுக்கு மேற்பட்ட புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். எல்லோருமே நடித்திருக்கின்றனர்... எனும் அளவில் நடித்திருப்பதை தவிர்த்து, இன்னும் சற்றே நன்றாக நடித்திருந்தால் "தப்பு" மேலும் சரியாக இருந்திருக்கும்! அதிலும் ராணி சதுர்வேதி, ஜெனிஃபர் உள்ளிட்ட நாயகிகள் பேசுவது ஒரு வரி என்றால் வாயசைப்பது வேறுமாதிரி இருக்கிறது! இதை இயக்குநர் அகிலனாவது நினைத்திருந்தால் கவனித்து திருத்தி இருந்திருக்கலாம்.

இனியவனின் இசை, என்.கிருஷ்ணனின் ஒளிப்பதிவு இரண்டும் தப்புக்கு சரியா ஒப்புக்கு நின்றிருப்பது ஆறுதல்! புதியவர் அகிலனின் இயக்கத்தில் கிளி சொன்னதை மட்டும் தான் செய்யும், குரங்கு சொல்லாததையும் செய்யும்! அதனால் கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி வேண்டும் என லாஜிக் பேசும் ஆண்களுக்கு, "தப்பு" சரியான "ஆப்பு" ரசிகர்களுக்கோ செம "மப்பு!"



வாசகர் கருத்து (6)

saleem - palani,இந்தியா
13 மார், 2011 - 20:37 Report Abuse
 saleem கலிகாலம்டா சாமி .....
Rate this:
tharma - mailam,இந்தியா
08 மார், 2011 - 18:25 Report Abuse
 tharma தமிழில் இது ஒரு மாறு பட்ட கதா பாத்திரம் போல் உள்ளது .....
Rate this:
raja - Riyadh,சவுதி அரேபியா
04 மார், 2011 - 17:38 Report Abuse
 raja ஆங்கில படங்களை தழுவி எடுக்கும் போது படம் மேலும் நன்றாக வர வேண்டும் இந்த மாதிரி மொக்கையாக இருக்கக் கூடாது, மிஸ்கின் எடுத்த நந்தலாலா ஒரு ஜப்பானிய படத்தின் தழுவல் என்றாலும் மிக அளஹாக தமிழில் கண்பிதிருந்தார்.
Rate this:
ஆனந்த் குமார் - singapore,இந்தியா
04 மார், 2011 - 15:02 Report Abuse
 ஆனந்த் குமார் இதெல்லாம் ஒரு படம் வேலை இல்லாதவங்க செய்றது....
Rate this:
manoj - chenai,இந்தியா
28 பிப், 2011 - 19:01 Report Abuse
 manoj padam sari mokkaya irukkum pole.......
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தப்பு தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in