Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

செங்காத்து பூமியிலே

செங்காத்து பூமியிலே,sengkattu boomile
  • செங்காத்து பூமியிலே
  • பவன்
  • பிரியங்கா
  • இயக்குனர்: ரத்ன குமார்
13 பிப், 2012 - 12:26 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » செங்காத்து பூமியிலே

தினமலர் விமர்சனம்



பாரதிராஜாவின், "கிழக்கு சீமையிலே" படத்திற்கு கதை எழுதிய பேராசிரியர் ரத்னகுமாரின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் கிராமத்து காதல், மோதல் கதைதான் "செங்காத்து பூமியிலே!"

கிழக்கு சீமையிலே படத்தில் பெண் கொடுத்து, கிராமத்து மாமன்-மச்சான்களுக்குள் ஏற்படும் ஈகோ பிரச்னையையும், அக்குடும்பபெண்களுக்கு இடையேயான பாசப்போராட்டத்தையும் கதையாக்கியிருந்த ரத்னகுமார், செங்காத்து பூமியிலே படத்தில் பெண்ணை கொடுத்து, எடுத்து கொள்வதற்குள் ஏற்படும் ஈகோ மோதல்களையும், அக்குடும்ப பெண்களின் பாசப்போராட்டத்தையும் கதையாக்கி, அதை காட்சிகளாக இயக்கவும் செய்து, ஈரம் இல்லாதோர் நெஞ்சத்திலும் ஈரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவரது இயக்கத்தில் பவன்-சுனுலட்சுமி, செந்தில்-பிரியங்கா ‌ஜோடிகளும் அழகன் தமிழ்மணி, வெள்ளைபாண்டி, ஸ்டாலின், சிங்கம்புலி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!

இசைஞானி இளையராஜாவின் இனிய இசையும், கார்த்திக்ராஜாவின் அழகிய ஒளிப்பதிவும் இப்படத்தின் பெரியபலம்! ரத்னகுமாரின் எழுத்து, இயக்கத்தில் உறவுகளுக்குள் உரசல் வேண்டாம் எனும் கருத்தை உரக்க சொல்லி வெளிவந்திருக்கும் "செங்காத்து பூமியிலே" படம் அல்ல "பாடம்"!



வாசகர் கருத்து (3)

PRABHAKARAN - Rasakkapalayam,இந்தியா
25 பிப், 2012 - 10:40 Report Abuse
 PRABHAKARAN இப்ப உள்ள பெரிய பட்ஜெட் படங்களை விட இது போல் கிராமத்து படங்களை பார்க்கும்போது மனம் மகிழ்ச்சி அடைகிறது. " மொத்தத்தில் செங்காத்து பூமி நாம் வாழும் பூமி "
Rate this:
எ கே VELMURUGAN - Pollachi,இந்தியா
23 பிப், 2012 - 11:54 Report Abuse
 எ கே VELMURUGAN நான் இந்த படத்தை பார்க்கலே ஆனா கிராமத்து படம் என்றாலே ஒரு ஆனந்தம் தான். அதாவது கிராமத்தில் உள்ள யதார்த்தம் பேச்சு நடை உடை பாவனைகள் எல்லாத்தையும் ரசிக்க முடியும். அது தான் நிஜ வாழ்க்கை. அதுவும் இளையராஜா மியூசிக் போட்டிருக்கிறார் என்றால் நிச்சியமாக படம் பிரமாதமாக தான் இருக்கும்.
Rate this:
oppusamyyyyyyyyyyyyyyyyyyyy - coiambatore,இந்தியா
13 பிப், 2012 - 13:01 Report Abuse
 oppusamyyyyyyyyyyyyyyyyyyyy டோனி நாட் அவுட் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in