Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வல்லக்கோட்டை

வல்லக்கோட்டை,Vallkottai
08 நவ, 2010 - 08:38 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வல்லக்கோட்டை

தினமலர் விமர்சனம்


எம்.ஜி.ஆர். காலத்து கதை! சமீபத்திய கந்தசாமி படத்தின் உல்டா!! என ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் படம்தான் வல்லக்கோட்டை.

கதைப்படி சில்லறை கேஸ் ஒன்றிற்காக சிறையில் இருக்கும் அர்ஜூன், அங்கு சந்திக்கும் ஒரு கைதியின் தம்பிக்கு உயிர் சிகிச்சை அளிக்க பணம் புரட்டித்தர ஒப்புக் கொள்கிறார். அதன்படி அதிர்ஷ்டவசமாக சிறையில் இருந்து ரீலிஸ் ஆகும் அர்ஜூன், வல்லக்கோட்டைக்கு வருகிறார். அங்கு நடக்க இருக்கும் ஒரு கொலையை தான் செய்ததாக ஒப்புக் கொண்டு மீண்டும் ஜெயிலுக்கு போக சம்மதிக்கிறார். அதற்காக வரும் லட்சக்கணக்கான பணத்தில் தன் சிறை நண்பனின் தம்பிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடும் அர்ஜூன், பெண் (நாயகி) ஒருவரால் சந்திக்கும் பிரச்னைகளும், அதற்கு வாயுபுத்ரனாக அளிக்கும் தீர்வுகளும்தான் வல்லக்கோட்டை படத்தின் மொத்த கதையும். அர்ஜூன் திட்டமிட்டபடி கொலைப்பழியை ஏற்று வாங்கப்போகும் பணத்துக்கு வஞ்சகமில்லாமல் சிறைக்கு சென்றாரா? அவரது கொலை பழியை ஏற்க இவரை கூலிக்கு அமர்த்துபவர்களின் முகமுடியை கிழித்தாரா? என்பது உள்ளிட்ட இன்னும் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் திரிக்கப்பட்டிருக்கிறது வல்லகோட்டையின் மீதிக்கதை!

அர்ஜூன் வழக்கம்போலவே ஆடுகிறார், பாடுகிறார், ஆக்ஷனில் தூள் பறத்துகிறார். அடிக்கடி கதாநாயகி ஹரிப்ரியா உள்ளிட்டவர்களை விட்டு உங்க ஆர்ம்ஸூம், மூக்கும் முழியும் அழகோ அழகென்று புகழ்பாட விடுகிறார். ஆனால் ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் அர்ஜூனுக்கு வயசாகி போனது சீன் பை சீன் தெரிவதை தவிர்க்க தவறி இருப்பது வேதனை. அதேமாதிரி அடிக்கடி மாறுவேடத்தில் வரும் அர்ஜூனை ரசிகர்களுக்கு அ‌டையாளம் தெரிவதும், எதிராளிகளுக்கு தெரியாததும் காமெடி!!

புதுமுகம் ஹரிப்ரியா அர்ஜூனுக்கு ஈடுகொடுத்து ஆடிப்பாடி ரசிகர்களை தன் கவர்ச்சியால் கவிழ்க்கிறார். சுரேஷ், ஆஷிஷ் வித்யார்த்தி, கஞ்சா கருப்பு, லதா, வின்சென்ட் அசோகன், சத்யன், லிவிங்ஸ்டன், பிரேம், ஓ.ஏ.கே. சுந்தர் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருந்தும் சிரிப்பும், சிறப்பும் வர மறுக்கிறது.

வல்லக்கோட்டை என முருகன் தள பெயரையும், வேல் கம்பையும் டைட்டில் ஆக்கிவிட்டு, படம் முழுக்க அர்ஜூனை வாயுபுத்ரன் என்று கூறி ஆஞ்சநேயர் பாடலை பாட விடுவது கோட்டையா... குறட்டையா? என்பதை டைரக்டர் ஏ.வெங்கடேஷ்தான் சொல்ல வேண்டும்.

தினாவின் இச‌ை, ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும், அர்ஜூனின் மாறுவேடங்களில் விட்ட கோட்டை, காமெடி எனும் ‌பெயரில் கஞ்சா கருப்பும், சத்யனும் விடும் குரட்டை உள்ளிட்டவைகளால் வல்லக்கோட்டை வல்லிய கோட்டை (விட்டிருக்கின்றனர்) என்றே தெரிகிறது.



வாசகர் கருத்து (15)

பெ.குமுதவள்ளி - J.b,மலேஷியா
30 நவ, 2010 - 16:51 Report Abuse
 பெ.குமுதவள்ளி வணக்கம் அர்ஜூன் சார் நீங்க நடிக்கும்,எடுக்கும் படங்களில் ஒரு message இருக்கு பாடல்களும் சூப்பர்.வல்லக்கோட்டை செம்மொழியே ,வாயூ புத்திரன் பாடல் அருமையோ அருமை ..! சார் மாசி எப்பொழுது வருகிறது? நீங்கள் மலேசியா வந்தப்போ சந்திக்க முடியலை வருத்தமாயிருக்கு.ஒரு நடிகானை பார்க்க விரும்புவதைவிட ஒரு தேச பக்தியுள்ள குடிமகனை,நல்ல மனிதரை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும். வேதம் message திருமணமான அனைவருக்கும் பயனளிக்கும் விதம் இருந்தது. குட்டி கவிதை 'மெசேஜ்' படம் பார்ப்பது பொழுதுபோக்கு..! அதில் நன்மை,தீமைகள் உண்டு..! புரிந்துக்கொண்டால் - நீ அறிவாளி.....! புரியாவிடில் - நீ யார்? நீயே யோசித்து பார்..! உண்மை விழங்கும்....! தினமலருக்கு நன்றி
Rate this:
kumuthavally - jb,மலேஷியா
28 நவ, 2010 - 10:41 Report Abuse
 kumuthavally அர்ஜூன் சார் நீங்கள் நடித்த படம் சூப்பர்.இது மசாலா படம்.நகைசுவை வடிவேலு மட்டும்தான் என்று நினைத்தேன் இப்போ புரியுது கஞ்ச கருப்பும் செய்ய முடியும் என்று உங்களுக்கு நல்ல நகைச்சுவை ஜோடிகள் நன்று. வித்தியாசமான வேடங்களில் எதிர்பார்த்தேன் ஆணை, பொம்பலாட்டம்,மருதமலை,திருவண்ணாமலை,வந்தேமாதரம் என்று கொடுத்தீர்கள் அந்த அனைத்து டீமுக்கும் நன்றி.திரைப்படம் என்பது என்னை பொறுத்தவரை ஒரு நல்ல massege தரும் விஷயம்.நன்மை,தீமை பார்க்கும் கண்களை பொருத்தது. அது சில தற்குறிகளுக்கு தெரியது. இது போன்ற விஷயங்களை தந்த தினமலருக்கு நன்றி . இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகை.
Rate this:
mokka - madras,இந்தியா
27 நவ, 2010 - 14:26 Report Abuse
 mokka அர்ஜுன் எங்கேயாவது மூலிகை வைத்தியம் செய்து கொள்ளுங்க. அப்பவாது நீங்க நல்ல younga தெரிவீங்க
Rate this:
shalini - painkulam,இந்தியா
26 நவ, 2010 - 11:55 Report Abuse
 shalini ஆக்சன் கிங் உங்க நடிப்பு சூப்பரா இருக்கு
Rate this:
சங்கர் - chennai,இந்தியா
25 நவ, 2010 - 14:51 Report Abuse
 சங்கர் இந்த மாதிரி படத்தை 2 மணி நேரம் பார்கிறவங்க ullavarai அர்ஜுன் மெனக்கெட்டு நடித்து கொண்டிருப்பார்.
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in