1

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சீட் பிக்சர்ஸ்
இயக்கம் - கல்யாண்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - காஜல் அகர்வால், யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார்
வெளியான தேதி - 17 மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 1/5

ஒரு சில படங்களைப் பார்க்கும் போது எதற்கு இப்படியெல்லாம் படமெடுக்கிறார்கள் என்று நமக்குத் தோன்றும். அப்படி ஒரு அதிர்ச்சியைக் கொடுத்த படம் இது. 'கப்ஜா' என்ற ஒரு படத்தைப் பார்த்துவிட்டு தலைவலியுடன் அடுத்து இந்தப் படத்தைப் பார்த்ததால் 'தலைவலி' கடும் தலைவலியாக மாறியதுதான் மிச்சம்.

ஒரு படத்தில் ஒரு கதை இருந்தால் பரவாயில்லை, இந்தப் படத்தில் சில பல கதைகளை வைத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண். இன்ஸ்பெக்டராக இருக்கும் காஜல் அகர்வால், பிரபல தாதா கேஎஸ் ரவிக்குமாரை கைது செய்ய ஒரு பக்கம் அலைகிறார். இன்னொரு பக்கம் காஜல் அகர்வாலை பேயாக இருக்கும் யோகி பாபு, ஜெகன், கிங்ஸ்லி ஆகியோர் அடிக்கடி பயமுறுத்துகிறார்கள். மற்றொரு பக்கம் தாதா கேஎஸ் ரவிக்குமார், காஜல் அகர்வால் அப்பாவின் நண்பர்களைக் கொல்ல வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இரண்டு, மூன்று கதைகள் படத்தில் இருக்கிறது. எல்லாம் சுற்றி வந்து முடிவதற்குள் நம்மை படுத்தி எடுத்துவிடுகிறது.

ஒரு படத்திலேயே யோகி பாபு, ஜெகன், கிங்ஸ்லி, ஊர்வசி, சத்யன், மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி என பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் ஒரு காட்சியில் கூட நம்மால் சிரிக்க முடியாத படமாக இந்தப் படம்தான் இருந்திருக்கும். 'ஜில்லா' படத்தின் காஜல் அகர்வாலை மீண்டும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்தில் தனக்கு என்ன பெயர் கிடைக்கும் என காஜல் அகர்வால் நடிக்க சம்மதித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

திரைக்கதை எங்கெல்லாமோ சுற்றிச் சுற்றி நகர்கிறது. அதை எழுதிய இயக்குனருக்காவது படத்தை முடித்து பார்த்த பிறகு புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இவ்வளவு பேரை நடிக்க வைத்ததற்காவாவது ஒரு நல்ல ரூம் போட்டு படத்தின் கதையை யோசித்திருக்கலாம் இயக்குனர். எப்படியோ பேசி சம்மதிக்க வைத்து அத்தனை பேரையும் நடிக்க வைத்துவிட்டார். அந்தத் திறமையை இந்தப் படத்தில் காட்டியிருக்கலாம். இதற்கு மேலும் இந்தப் படத்தைப் பற்றி எழுதி உங்களது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

கோஸ்டி - கோ அன்ட் ஸ்டடி சினிமா…இயக்குனரே…

 

கோஸ்டி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கோஸ்டி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓