Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

எழுமின்

எழுமின்,Ezhumin
  • எழுமின்
  • இயக்குனர்:
19 அக், 2018 - 13:09 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » எழுமின்

நடிப்பு - விவேக், தேவயானி மற்றும் பலர்
இயக்கம் - வி.பி. விஜி
இசை - கணேஷ் சந்திரசேகரன்
தயாரிப்பு - வையம் மீடியாஸ்
வெளியான தேதி - 18 அக்டோபர் 2018
நேரம் - 1 மணி நேரம் 50 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் சிறுவர், சிறுமியர்களுக்கான படங்கள் அபூர்வமாகத்தான் வரும். முன்பெல்லாம் வருடத்திற்கு ஓரிரு படங்களாவது வரும். ஆனால், இப்போதெல்லாம் சில வருடங்களுக்கு ஒரு படம்தான் வருகிறது. அந்த ஒரு குறையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த 'எழுமின்' தீர்த்து வைத்திருக்கிறது.

சிறுவர், சிறுமியர்கள் படிப்பைத் தவிர தற்காப்புக் கலைகளை அவசியம் பயில வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம் தான் இந்த 'எழுமின்'. இயக்குனர் வி.பி.விஜி, அதைத் திணிக்காமல் இயல்பான ஒரு கதையம்சத்துடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

பிசினஸ்மேன் ஆன விவேக், தேவயானி தம்பதியருக்கு பள்ளியில் படிக்கும் ஒரே மகன். குத்துச்சண்டை வீரர். அவர் பயிற்சி பெறும் அகாடமியிலேயே மேலும் சில ஏழை சிறுவர், சிறுமியர் வெவ்வேறு தற்காப்புக் கலைகளைப் பயில்கிறார்கள். அவர்கள் அனைவரும் விவேக்கின் குடும்பத்தில் ஒருவராகப் பழகுகிறார்கள். ஒரு குத்துச்சண்டை போட்டியில் விவேக்கின் மகன் வெற்றி பெற்றதால், அதிகமான மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறார். இதனால் விவேக், தேவயானி தம்பதியர் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

இருப்பினும் அந்தக் கவலைகளை மறந்து மகனின் நண்பர்களான அந்த சிறுவர், சிறுமியர் தற்காப்புக் கலைகளில் சிறந்து வளர வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் பயிற்சி பெறும் அகாடமியில் அவர்கள் கட்டணத்தை செலுத்தாததால் நீக்கப்படுகிறார்கள். அவர்களுக்காகவே விவேக் மகனின் ஆசைப்படி ஒரு அகாடமியை ஆரம்பித்து பயிற்சி அளிக்கிறார். ஆனால், விவேக் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற முடியாதபடி அரசியல் நடக்கிறது. அதை மீறி அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பிசினஸ்மேன் ஆக விவேக். இந்தப் படத்தில் நகைச்சுவை எதுவும் செய்யாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஒரு பாசமான அப்பாவாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக தேவயானி. மகன் அகால மரணமடைந்தாலும் மற்ற ஏழை சிறுவர், சிறுமியர்களுக்காக தங்களை பெற்றோர் ஆக நினைத்துக் கொண்டு பாசம் காட்டுகிறார்கள்.

படத்தில் நடித்துள்ள சிறுவர், சிறுமியர்களாக நடித்துள்ள பிரவீண், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிரித்திகா, தீபிகா ஆகியோர் முதல் படம் என்று சொல்ல முடியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக அழகம் பெருமாள், நிஜத்திலும் இம்மாதிரியான கதாபாத்திரங்களை விளையாட்டுத் துறையில் பார்க்கலாம்.

அனிருத், தனுஷ் என பிரபலங்கள் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அதற்காகவாவது இனிமையான பாடல்களைக் கொடுத்திருக்கலாம்.

படத்தில் தேவையற்ற காட்சிகள், தேவையற்ற பாடல்கள் எதுவும் இல்லாமல் இருப்பது பெரிய ஆறுதல். உங்கள் வீட்டு குட்டீஸ்களுன் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

எழுமின் - எழுச்சி



வாசகர் கருத்து (1)

21 அக், 2018 - 11:53 Report Abuse
sayedTirunelveli vada Chennai, sanda koli2, waste but this movie not bad. one time Kandipa pakkalam...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
எழுமின் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in