காத்திருப்போர் பட்டியல்,Kathiruppor pattiyal

காத்திருப்போர் பட்டியல் - பட காட்சிகள் ↓

Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சச்சின் மணி, நந்திதா ஸ்வேதா, அருள்தாஸ் மற்றும் பலர்
இயக்கம் - பாலையா டி. ராஜசேகர்
இசை - ஷான் ரோல்டன்
தயாரிப்பு - லேடி டிரீம்ஸ் சினிமாஸ்

சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பதில் எந்தத் தவறுமில்லை, ஆனால் அவற்றை எப்படி எடுக்கிறோம் என்பதை கவனமாக எடுக்க வேண்டும். ஏதோ ஒரு விஷயம் மட்டும் சிறப்பாக இருந்தால் அந்தப் படம் ஓடிவிடாது, ரசிகர்களைக் கவரக் வடிய விஷயம் ஏதாவது ஒன்று இருந்தால்தான் ஓடும்.

அப்படிப்பட்ட படங்களை இயக்குனரும் இயக்குனர்கள் முதலில் ஒரு ரசிகராக தன்னுடைய படம் ரசிகர்களைக் கவருமா என்று யோசித்தாலே போதும் பல சிறிய படங்கள் வெற்றி பெற்று விடும்.

காத்திருப்போர் பட்டியல் சிறிய பட்ஜெட் படம்தான். இந்தப் படத்தை இயக்குவதற்காக இயக்குனர் பாலையா டி. ராஜசேகர் எவ்வளவு ஆண்டுகள் காத்திருந்திருப்பாரோ, அதைப் பற்றி அவர் யோசித்திருந்தாலே நல்ல கதையை உருவாக்கியிருப்பார். இந்தப் படத்தில் கதையே இல்லையே ?.

வேலைக்குப் போகாத சச்சின் மணிக்கும், வேலைக்குப் போகும் பணக்கார வீட்டுப் பெண்ணான நந்திதா ஸ்வேதாவுக்கும் காதல். இந்தக் காதலை ஏற்காத நந்திதாவின் அப்பா, அவருக்கு வேறு திருமண ஏற்பாட்டை செய்கிறார். காதலி நந்திதாவை உடனடியாக சந்திக்க வேண்டி, ரயிலில் புறப்பட வேண்டிய சூழ்நிலையில் ரயில்வே போலீசாரிடம் ஒரு குற்றத்திற்காக சிக்கி விடுகிறார் சச்சின் மணி. காதலியை சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் ரயில்வே போலீசாரிடமிருந்து தப்பிக்க முயல்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் எந்த விதமான அழுத்தமான திருப்பங்களோ, சுவாரசியமான காட்சிகளோ இல்லை. பாண்டிச்சேரி தெருக்களில் சில காட்சிகள், ரயில்வே காவல் நிலையம் ஒன்றில் பெரும்பாலான காட்சிகள் என மிக எளிமையாக படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.

புதுமுகம் சச்சின் மணி, ஒரு ஹீரோவுக்கு உரிய தகுதியுடன் இருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தில் நிறைவாகவும் நடித்திருக்கிறார். குறும்பும், காதலும், கோபமும் நன்றாகவே வருகிறது. மினிமம் பட்ஜெட் படம் எடுக்க நினைக்கும் இயக்குனர்களின் ஹீரோவாக மாறலாம்.

நந்திதா ஸ்வேதா படத்தின் நாயகி. சச்சின் மணியைக் காதலிப்பதைத் தவிர அவருக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. ஒரு சராசரி காதலி என்ன செய்வாரோ அதைச் செய்கிறார். நந்திதா மேக்கப் இல்லாமலேயே அழகாக இருப்பார். அவருக்கு ஓவர் மேக்கப் போட்டு கெடுத்துவிட்ட அந்த புண்ணியவான் யாரோ ?. ஏன் நந்திதா, நீங்க கண்ணாடி கூட பார்க்க மாட்டீர்களா ?.

படத்தின் நாயகன் என சொல்லப்படும் சச்சின் மணியை விட அதிகக் காட்சிகளில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருள்தாஸ் தான் வருகிறார். ரயில்வே இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். ரயில்வே போலீசை யாருமே மதிக்க மாட்டேன் என்கிறார்களே என வயிற்றெரிச்சலில் இருக்கும் ஒரு கதாபாத்திரம். அந்த எரிச்சலை நன்றாகவே காட்டுகிறார்.

சச்சின் மணியுடன் சக கைதிகளாக மாட்டியுள்ள மனோபாலா இரட்டை அர்த்த நகைச்சுவை செய்து முகம் சுளிக்க வைக்கிறார். அப்புக்குட்டி, சென்ராயன், அருண்ராஜா காமராஜ், இவர்களும் சக கைதிகள். கொஞ்சமே கொஞ்சம் நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் இடம் பெற உதவியிருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசையா படத்திற்கு என கேள்வி கேட்க வைக்கிறார். ஒரு பாடல் கூட நன்றாக இல்லை. பின்னணி இசைக்குத் தேவையான காட்சிகள் படத்தில் இல்லை. பாண்டிச்சேரி காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சுகுமார் படத்தில் இருப்பது தெரிகிறது.

கிளைமாக்ஸ் காட்சி நடக்கும் ரயில் நிலையத்தில் ஒரு பக்கம் காஞ்சிபுரம் என்றும் மற்ற இடங்களில் தாம்பரம் என்றும் பெயர்ப் பலகை இருக்கிறது. அவ்வளவு கவனக்குறைவுடன் இருந்திருக்கிறார் இயக்குனர்.

காத்திருப்போர் பட்டியல் - வெயிட்டிங் லிஸ்ட் தான்...

 

பட குழுவினர்

காத்திருப்போர் பட்டியல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓