Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

முக்காபாஸ் (ஹிந்தி)

முக்காபாஸ் (ஹிந்தி),Mukkabaaz
  • முக்காபாஸ் (ஹிந்தி)
  • இயக்குனர்: அனுராக் காஷ்யப்
13 ஜன, 2018 - 13:07 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » முக்காபாஸ் (ஹிந்தி)

நடிகர்கள் : வினீத் குமார் சிங், ஜோயா ஹூசைன் மற்றும் ஜிம்மி ஷெர்கில்
இயக்கம் : அனுராக் காஷ்யாப்
தயாரிப்பு : ஆனந்த் எல் ராய் மற்றும் அனுராக் காஷ்யாப்

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப் இயக்கத்தில், விளையாட்டையும், அதில் நடக்கும் அரசியல் முறைகேடுகளையும் மையமாக வைத்து வெளியாகி உள்ள படம் முக்காபாஸ். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...!

உபி., மாநிலம் பரேலியில் கதை நடக்கிறது. குத்துச்சண்டை வீரரான ஸ்ரவன் குமார் எனும் வினீத் குமார் சிங், குத்துசண்டை பயிற்சி மையத்தில் பகவான்தாஸ் மிஸ்ரா எனும் ஜிம்மி ஷெர்கிலிடம் பயிற்சி பெறுகிறார். பயிற்சிக்கு போன இடத்தில் ஜிம்மியின் உறவுக்கார பெண்ணான சுனைனா மிஸ்ரா (ஜோயா ஹூசைன்) உடன் காதல் ஏற்படுகிறது. இருவீட்டாரது பெற்றோரும் சம்மதிக்கிறார்கள். ஆனால் ஜிம்மியின் சம்மதமின்றி இந்த திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் கோபமாகும் ஜிம்மி, வினீத்தை எப்படியாவது பாக்ஸிங்கை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார். இந்த மோதலில் யார் ஜெயித்தார்கள் என்பது கதை.

அறிமுக நடிகர் வினீத் குமார் சிங், புதுமுகம் என்றே எண்ண முடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அதேப்போல் ஜோயா ஹூசைனும் தன் நடிப்பால் கவருகிறார்.

ஜிம்மி ஷெர்கில் வில்லத்தனத்தில் மிரட்டல். அதேப்போன்று பயிற்சியாளராக வரும் ரவி கிஷனும் தன் ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்.

எப்பவும் படங்களில் வித்தியாசம் காட்டும் அனுராக் காஷ்யாப். முக்காபாஸிலும் அதை வெளிப்படுத்தியிருக்கிறார். விளையாட்டில் நடக்கும் அரசியல் விளையாட்டு, முறைகேடுகள் போன்றவற்றை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். படத்திற்கு வசனமும், ஒளிப்பதிவும், இசையும் பக்கபலமாக அமைந்துள்ளது. அதேசமயம் படத்தின் நீளம் கொஞ்சம் தொய்வை ஏற்படுத்துகிறது. முதல்பாகம் விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாகம் மெதுவாக செல்கிறது.

உண்மைசம்பவத்தை அடிப்படையாக வைத்து, அதில், விளையாட்டு முறைகேடுகள், இனவெறி அரசியல் உடன் காதலையும் அழகாக கையாண்டு ஒரு அருமையான படத்தை, அனைவரும் பார்க்கும் படமாக வெளிவந்திருக்கிறது முக்காபாஸ்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in