Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சங்குசக்கரம்

சங்குசக்கரம்,Sanguchakkaram
  • சங்குசக்கரம்
  • பூன்னகைப்பூ கீத‌ா
  • இயக்குனர்: மாரிசன்
30 டிச, 2017 - 10:33 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சங்குசக்கரம்

நடிப்பு - கீதா, திலீப் சுப்பராயன், பேபி மோனிகா மற்றும் பலர்
இயக்கம் - மாரிசன்
இசை - ஷபீர்
தயாரிப்பு - லியோ விஷன், சினிமாவாலா பிக்சர்ஸ்
வெளியான தேதி - 29 டிசம்பர் 2017
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் இந்த பேய் சீசன் எப்போது ஓயும் என்று தெரியவில்லை. புதிய வருடத்திலாவது பேய் படங்கள் இல்லாமல் இருந்தால் நல்லது. இந்த 'சங்கு சக்கரம்' படமும் ஒரு பேய்ப் படம்தான். என்ன ஒன்று, பேயையே கேள்வி கேட்டு மிரட்டும் குழந்தைகளை வைத்து பேயை மிரட்டுவதோடு, நம்மையும் மிரட்ட முயற்சித்திருக்கிறார்கள்.

குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு படத்தில் வரும் பேய் வேண்டுமானால் மிரண்டு போகும், நம்மால் மிரள முடியவில்லை. படத்தின் இடைவேளை வரை ஒரு குட்டிப் பேயை மட்டும் காட்டுகிறார்கள். இடைவேளையின் போதுதான் பெரிய பேய் வருகிறது. அந்தப் பேயாவது வந்து மிரட்டும் என்று பார்த்தால் குழந்தைகளைக் கண்டு அது மிரண்டு ஓடுகிறது. அப்படி ஒரு பயந்தாங்கொள்ளி பேய் அது.

சிறுவர்கள், சிறுமியர்கள் அடங்கிய ஐந்தாறு நண்பர்கள் குழு ஒரு பழைய பங்களாவுக்குள், அது பேய் பங்களா என்று தெரியாமலேயே விளையாடச் செல்கிறது. அவர்களைத் தொடர்ந்து ஒரு ஏழை சிறுவனும், ஒரு பணக்கார சிறுவனும் அந்த பங்களாவிற்குள் தனித் தனியாகச் செல்கிறார்கள். பணக்காரச் சிறுவனின் இரண்டு கார்டியன்கள் அவனைக் கொன்று 500 கோடி ரூபாய் சொத்தை அடைய அந்த வீட்டிற்குள் நுழைகிறார்கள். ஐந்தாறு சிறுவர்களை திட்டமிட்டு அந்த பங்களாவுக்குள் அனுப்பி, அவர்களை வைத்து பணம் பறிக்க முயல்கிறார் திலீப் சுப்பராயன். அவர்கள் அனைவரும் அந்த வீட்டிற்குள் இருக்கும் அம்மா பேய், அவரது மகள் பேய் ஆகிய இருவரிடமும் மாட்டிக் கொள்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் அம்மா பேய் ஆக கீதா. இடைவேளைக்குப் பின் தான் பேயாக வருகிறார். முகத்தில் வெள்ளை மேக்கப்புடனும், கண்களில் கான்டாக்ட் லென்ஸுடனும் நம்மை பயமுறுத்தப் பார்க்கிறார். ஆனால், பயம் தான் துளி கூட வரவில்லை. அவருடைய மகள் பேயாக பேபி மோனிக்கா. ஆரம்பத்தில் கொஞ்சம் மிரட்டுகிறார். அதன் பின் சிரித்து மயக்குகிறார்.

மற்ற குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் நடித்தது போல இல்லாமல் அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். பணக்கார வீட்டு சிறுவனாக நடிப்பவருக்கு மட்டும் கொஞ்சம் அதிகமான வசனங்கள், கேள்வி கேட்டே துளைத்தெடுக்கிறார். இப்படி ஒரு அட்டகாச பட்டாளத்தை வைத்துக் கொண்டு முற்றிலும் நகைச்சுவையாக, கலாட்டாவாகக் காட்சிகளை அமைத்து ரசிக்க வைத்திருக்கலாம் இயக்குனர், ஆனால், மிஸ் செய்துவிட்டார்.

குழந்தைகளைக் கடத்தும் ரவுடியாக திலீப் சுப்பராயன், வித்தியாசமான கெட்டப்பில் கலகலக்க வைக்கிறார். தமிழ் சினிமாவில் புது வில்லன் உருவாகி வருகிறார்.

ஷபீர் பின்னணி இசை பரவாயில்லை. ஒரே பங்களாவுக்குள் படம் முழுவதும் நகர்கிறது. இருந்தாலும் ஒளிப்பதிவாளர் ரவி கண்ணன், அது தெரியாமல் பல இடங்களில் காட்சிகளைப் பிடித்து அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.

பேய்க்கும் மனிதர்களுக்கும் சண்டை, பேய்க்கும் பேய்க்கும் சண்டை என பல படங்களைப் பார்த்து சலித்துப் போன நமக்கு, பேய்க்கும் குழந்தைகளுக்கும் சண்டை என வந்துள்ள இந்த சங்கு சக்கரத்தை இன்னும் நன்றாக சுத்த வைத்திருக்கலாம்.

'சங்கு சக்கரம்' - பாதிதான் சுற்றுகிறது...!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in