அஜ்ஜி (ஹிந்தி),Ajji

அஜ்ஜி (ஹிந்தி) - பட காட்சிகள் ↓

Advertisement
0

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : சுஷ்மா தேஷ்பாண்டே, ஸ்ரவாணி சூர்யவன்ஷி
இயக்கம் : தேவாசிஷ் மகிஜா
தயாரிப்பு : விக்ரம் மெஹ்ரா மற்றும் சித்தார்த் ஆனந்த் குமார்

சமீபகாலமாக அதிகரித்து வரும் பெண் பிள்ளைகளின் பாலியல் தொல்லையை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் மற்றுமொரு படம் தான் அஜ்ஜி. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...!

கதைப்படி, 10 வயதே ஆன சிறுமி, மண்டா கதாம் எனும் ஸ்ரவாணி சூர்யவன்ஷி, அரசியல்வாதியின் மகன் விலாஸ்ராவ் தவேல் என்பவரால் பாலியல் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார். தன் பேத்தியின் நிலைமைக்கு காரணமான அந்த கொடூரனை பழிதீர்க்க களமிறங்குகிறார் மண்டாவின் பாட்டியான சுஷ்மா பாண்டே. அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா... இல்லையா... என்பது அஜ்ஜி படத்தின் மீதிக்கதை.

படத்தின் கதை மொத்தமும் சிறுமி ஸ்ரவாணி சூர்யவன்ஷி மற்றும் சுஷ்மா பாண்டேயை சுற்றியே நகருவதால் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மொத்தமும் அவர்கள் தான் தெரிகிறார்கள். அபிஷேக் பானர்ஜி, ஸ்மிதா தாம்பே, சுதீர் பாண்டே, விகாஷ் குமார் உள்ளிட்டவர்களும் அவரவர் ரோல்களை சரியாக செய்திருக்கிறார்கள்.

அனுராக் காஷ்யாப்பிடம் உதவியாளராக இருந்த தேவாசிஷ் மகிஜா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இயக்கம் என்று பார்த்தால் இயக்குநர் தன் ரோலை சிறப்பாக செய்துள்ளார். ஆனால் கதைக்கு ஏற்ற திரைக்கதையில் ஓட்டமில்லை. முதற்பாதி ஏனோ மெதுவாக நகருகிறது. ஆனாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகருகிறது.

பெண் பிள்ளைகளின் பாலியல் சம்பவங்களை மையப்படுத்திய படம் என்றாலும், பாட்டி - பேத்தியின் உறவையும், பாசத்தையும் அழகாக காட்டியிருக்கும் அஜ்ஜியை ஒரு முறை பார்க்கலாம்.

 

பட குழுவினர்

அஜ்ஜி (ஹிந்தி)

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓