Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

X வீடியோஸ்

X வீடியோஸ்,X Videos
  • X வீடியோஸ்
  • இயக்குனர்: சஜோ சுந்தர்
02 ஜூன், 2018 - 12:12 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » X வீடியோஸ்

நடிப்பு - அஜய்ராஜ், பிரபுஜித், அக்ரிதி சிங், ரியாமிக்கா, ஷான் மற்றும் பலர்.
இயக்கம் - சஜோ சுந்தர்
இசை - ஜோஹன்
தயாரிப்பு - கலர் ஷேடோஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியான தேதி - 1 ஜுன் 2018
நேரம் - 1 மணி நேரம் 48 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு படம் வெளிவந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அரை நிர்வாணக் காட்சிகள் படத்தில் அடிக்கடி வந்து போகின்றன. படத்தின் கதையே அதைச் சுற்றித்தான் இருப்பதால் அந்தக் காட்சிகளும் படத்திற்கு அவசியமாகிறது.

இந்தப் படம் 'ஏ' சர்டிபிகேட் படம் என்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறோம்.

பொழுதுபோக்கிற்காக சிலர் அவர்களது மனைவி, காதலி ஆகியோரை நிர்வாணமாகவோ, அரை நிர்வாணமாகவோ, ஆடை மாற்றும் போதே வீடியோவாக எடுப்பது வழக்கம். அப்படிப்பட்ட வீடியோக்கள் அவர்களது எந்த மாதிரியான ஆபத்துகளை விளைவிக்கும் என்பதை இன்றைய டெக்னாலஜி வளர்ச்சியை வைத்து அந்தத் தவறை செய்யாதீர்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர்.

அஜய் ராஜ் ஒரு பத்திரிகையாளர். அவர் வேலை பார்க்கும் ஊடக எடிட்டர், 'பார்ன்' வீடியோக்கள் என அழைக்கப்படும் ஆபாச வீடியோ இணையதளங்களைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதச் சொல்கிறார். அதற்கான வேலைகளில் அவர் இறங்கும் போது நெருங்கிய நண்பனின் மனைவி ஒருவரின் வீடியோவே அந்த இணையதளத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதை நண்பனிடம் சொல்ல, அவமானம் தாங்காத நண்பன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால், அப்படிப்பட்ட இணையதளத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அஜய்ராஜ் அவருடைய நண்பன் நிஜய், காவல் துறை நண்பன் ஷான் ஆகியோருடன் களத்தில் இறங்குகிறார். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

ஆபாச வீடியோக்கள் எப்படி பரவுகிறது, அதை எதற்காக எடுக்கிறார்கள் என்பதை ஆரம்பத்திலேயே அழுத்தமாக வெளிப்படுத்தி விடுகிறார் இயக்குனர். அதற்காக ஏறக்குறைய ஒரு முழு நிர்வாண காட்சி ஒன்றை படத்தில் வைத்து அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.

அது போல சில அரை நிர்வாண காட்சிகளும் படத்தில் உண்டு. ஆனால், இப்படிப்பட்ட கதை கொண்ட படங்களுக்கு அந்தக் காட்சிகள் அவசியம்தான். அதற்காக அப்படியேவா காட்டுவது, 'மாஸ்க்' செய்தாவது அந்தக் காட்சிகளைக் காட்டியிருக்கலாம்.

பத்திரிகையாளர்களாக நடித்திருக்கும் அஜய்ராஜ், நிஜய் இயல்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் நண்பனுக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கு நடக்கக் கூடாது என அவர்கள் முயற்சிப்பது நிறைவு. இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஷான், ஹிந்தி நடிகர் போலத் தெரிகிறார். சில சமயங்களில் தமிழ்ப் படம் பார்க்கும் உணர்வே வரவில்லை. தமிழ்ச் சாயல் இல்லாத முகங்களை படத்தின் நடிகர்களாக இயக்குனர் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அது ஏன் எனத் தெரியவில்லை.

ஆரம்பத்திலேயே தன் தம்பி பெரும் தவறு செய்வதை அஜய்ராஜ் கண்டுபிடித்துவிடுகிறார். ஆனால், தன் தம்பிக்கு என்ன தண்டனை வாங்கிக் கொடுத்தார் என்பதைக் காட்டவில்லை. இப்படிப்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்து இணையதளம் நடத்துபவராக பிரபுஜித். மற்றவர்களின் மானம் பெரிதில்லை, தனக்கு பணம்தான் பெரிது என நினைக்கும் கதாபாத்திரம். கூடவே அவருக்குத் துணையாக நான்கு நண்பர்கள். டெக்னாலஜியால் எப்படியெல்லாம் நம் படுக்கை அறைக்குள்ளும் நுழைய முடிகிறது என்பதை இவர்கள் மூலம் காட்டி விடுகிறார் இயக்குனர். அதற்கு தனி பாராட்டுக்கள்.

அக்ரிதி சிங் பாதிக்கப்படும் பெண்ணாக நடித்திருக்கிறார். துணிச்சலாக அரை நிர்வாணக் காட்சியில் நடித்து அதிர வைக்கிறார். அரசியல்வாதி பெண்ணாக நடித்திருக்கும் ரியாமிக்காவும் அப்படியே நடித்திருக்கிறார்.

ஷார்ப்பான எடிட்டிங் படத்தை வேகமாகவே நகர்த்துகிறது. படத்தில் டெக்னிக்கலாக இன்னும் அசத்தியிருக்கலாம். மினிமம் பட்ஜெட் படம் என்று பல காட்சிகளில் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.

இன்றைய மொபைல் யுகத்தில், சிலரின் தவறான ஆசைகளால் என்ன மாதிரியான தவறுகள் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும் புரிய வைத்ததற்காக படக்குழுவினரைப் பாராட்டலாம்.

x வீடியோஸ் - ஆசையும், விபரீதமும்...!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in